Sunday, September 18, 2011

நினைவில் வாழும் நிகரில்லா தலைவனுக்கு



18.09.2011 தோழர் சுனில் மைத்ராவின் 15 வது நினைவு தினம்  
 சுதந்திர போராட்ட வீரரும்,ஆளுமையான பேச்சாற்றல் உடையவரும் ,சிறந்த எழுத்தாளரும் ,மிகச்சிறந்த பாராளுமன்ற உறுப்பினரும் எல்லாவற்றிக்கும் மேலாக இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் போர்ப்படை தளபதியுமான நமது சங்க ஸ்தாபக தலைவர்களில் ஒருவருமான நமது நினைவுகளில் என்றென்றும் வாழும் தோழர் சுனில் மைத்ராவிற்கு வீரவணக்கங்களை உரித்தாக்குவோம் அவர் தம் வழிநடப்போம்.

Friday, September 16, 2011

மாணவிகளுக்கான மனநம்பிக்கை தந்த வங்கி வேலைவாய்ப்பு பயிற்சி முகாம்

சிவகங்கை அரசு மகளிர் கலைக்கல்லூரியில் கடந்த 15.09.2011 அன்று நடைபெற்ற வங்கித்தேர்விற்க்கான ஆயத்த பயிற்சிமுகாமின் சில காட்சிகள்


                                                                          

Wednesday, September 14, 2011

சிவகங்கை மண்ணில் சிறப்பாக நடைபெற்ற வங்கித்தேர்வுக்கான ஆயத்த முகாமின் சில பதிவுகள்

சிவகங்கை மன்னர் துரைசிங்கம் அரசு கலைகல்லூரியில் மாணவர்களுக்கான வங்கித்தேர்வினை நம்பிக்கையுடன் எதிர்கொள்ளும் ஆயத்த பயிற்சி முகாம் கடந்த 13.09.2011 அன்று  மிக சிறப்பான முறையில் நடந்தேறியது அத்தகைய நிகழ்வின் சில பதிவுகள் 
                                                                                                     
                                   
தலைமை உரையாற்றும்  PFI  சிவகங்கை  கிளை தலைவர் திரு.S. கண்ணப்பன்    தேசிய நல்லாசிரியர்  விருதுபெற்ற ஆசிரியர் 
         
                   வரவேற்புரை இன்சூரன்ஸ் ஊழியர் சங்க சிவகங்கை கிளை செயலாளர்
                           
                           

முன்னிலை வகிக்கும் திரு.DR . E புல்டன் ஜோஸ் நியூமன்
முதல்வர் மன்னர் துரைசிங்கம் அரசு கலைக்கல்லூரி சிவகங்கை

விளக்கஉரை நிகழ்த்தும் திரு B பாரதிதாசன்
DR அம்பேத்கார் கல்வி வேலைவாய்ப்பு சிவகங்கை மைய ஆசிரியர்

                            ஆன்லைனில் பதிவு குறித்து திரு A அனந்தராமன் IOB  சிவகங்கை
      

  தேர்வு எதிர்கொள்ளும் விதம் குறித்து தன்னம்பிக்கை உரை வழங்கும் திரு K கணேஷ்
     DR அம்பேத்கார் கல்வி வேலைவாய்ப்பு சிவகங்கை மைய ஒருங்கிணைப்பாளர் 

PFI பணி குறித்து பகிர்ந்து கொள்ளும் திரு N சுரேஷ்குமார்
இன்சூரன்ஸ் ஊழியர் சங்க மதுரை கோட்டச்செயலாளர்
வாழ்த்துரை வழங்கும் திரு V ரெங்கநாதன் LIC சிவகங்கை கிளை முதன்மை மேலாளர்
                                   நினைவுபரிசு வழங்கி மகிழும் PFI தலைவர்
நன்றியுரை  இன்சூரன்ஸ் ஊழியர் சங்க சிவகங்கை கிளை தலைவர்  

Saturday, September 10, 2011

சிவகங்கை சீமையில் வங்கித் தேர்விற்கான ஆயத்த முகாம்

        
                                       இந்தியாவிற்கான மக்கள் இயக்கம்
                                                   சிவகங்கை கிளை சார்பில்

 சிவகங்கை மன்னர் துரை சிங்கம் அரசு கலைக்கல்லுரி மாணவர்களை சந்தித்து வங்கித்தேர்வினை நம்பிக்கையுடன் எதிர் கொள்ள செய்யும்
                                                         ஆயத்த முகாம்


அவதியுறும் அம்புகள்

                     அவதியுறும் அம்புகள்                                          
அம்புகளுக்கு தண்டனை தரும்
அற்புதமான நாடு
பாருக்குள்ளே நல்ல நாடு

தொடர்பைத் தொலைத்ததில்
காமன்வெல்த் திருவிளையாடலில்
எண்ண முடியாத கோடிகள் ....
எழுமலையான் மொட்டை
கார்கில் குடும்பத்தினருக்கு... ஆதர்ஸில்
நம்பிக்கையைப்  பெற
நாணயம் தேவையில்லை
நோட்டுக்களே போதும் என்ற
செய்வினை ஜெயிலில்
செயப்பாட்டு வினை நாற்காலியில்
திக்குத் தெரிந்த திகாரில்
இலையுதிர் காலம் அம்புகளுக்கு 
வசந்த காலம் என்றுமே
எய்தவனுக்கா !
                                                     சி. சந்திரசேகரன்
                                             கோட்ட அலுவலகம், மதுரை

                                                                                                                 
 

Wednesday, September 7, 2011

மதுரை மாணவர்களுக்கான மாபெரும் சிறப்பு பயிற்சி முகாம்


                        வங்கித் தேர்வினை நம்பிக்கையுடன் எதிர்கொள்ள 
              மதுரை மாணவர்களுக்கான இலவச சிறப்பு பயிற்சி முகாம் 
மதுரை நகர தொழிற்சங்கங்களின்  மாபெரும்  இப்பணி பணி சிறக்க வாழ்த்துகிறோம் 


அன்னா ஹசாரே அம்பலமாகிறார்


நான்அன்னாஹசாரேயாகஇருக்கமாட்டேன்



அருந்ததி ராய்


புகழ்மிகு எழுத்தாளர் அருந்ததி ராய், கலை-இலக்கியம் மட்டுமின்றி, அரசியல்மற்றும் பொருளாதாரம் சம்பந்தமான சமுதாயப் பிரச்சனைகள் குறித்துத் தன்கருத்துக்களைத் தயக்கமின்றி வெளிப்படுத்துபவர். அன்னா ஹசாரேயைமுன்னிறுத்தி இப்போது நடந்துவரும் கிளர்ச்சிபற்றி ஹிந்து நாளிதழில் (THE HINDU) 22.08.2011-ல் அவர் எழுதிய கட்டுரையின் தமிழாக்கம் இங்கே தரப்படுகிறது. தமிழில்: விதுரன்





நாம் தொலைக்காட்சியில் இப்போது பார்த்துக்கொண்டிருக்கிற காட்சிமெய்யாலுமே புரட்சியெனில், அது, இக்கட்டான நிலையைத் தோற்றுவிக்கின்ற,அறிவுபூர்வமற்ற அண்மைக்கால சம்பவங்களில் ஒன்றாகத்தான் இருக்க வேண்டும்.'ஜன் லோக்பால்' மசோதா குறித்து உங்களுக்கு எத்தனையோ கேள்விகள்இருக்கலாம்; ஆனால், கட்டத்திற்குள் 'சரி' என்று குறியிட்டு ஆமோதிக்கின்றவகையில், (அ).வந்தே மாதரம் (ஆ). பாரத மாதாவுக்கு ஜே (இ). அன்னாதான்இந்தியா-இந்தியாதான் அன்னா (உ). ஜெய் ஹிந்த் என்பவைதான் உங்களுக்குஅளிக்கப்படும் விடைகளாக இருக்கும்.




முற்றிலும் வேறுபட்ட காரணங்கள், முற்றிலும் மாறுபட்ட வழிமுறைகளைக்கொண்டிருந்த போதிலும், மாவோயிஸ்டுகளுக்கும் ஜன் லோக்பால்மசோதாவுக்கும் ஒரு விஷயத்தில் ஒற்றுமை உண்டு: அவை இரண்டுமே, இந்தியஅரசைத் தூக்கியெறியத் துடிக்கின்றன. இவற்றில் ஒன்று, பெரும்பாலும்ஏழைகளிலும் பரம ஏழைகளான ஆதிவாசிகளின் படையைக் கொண்டு, கீழிருந்து மேலாகநடத்தப்படுகின்ற ஆயுதப் போராட்டம். மற்றதோ, புத்தம் புதிதாகவார்த்தெடுக்கப் பட்டிருக்கும் புனிதப்பெருமகனார் ஒருவரின் தலைமையில்,பெரும்பாலும் நகரவாசிகளையும் நிச்சயம் வசதிபடைத்தவர்களையும் கொண்டபடையினால் மேலிருந்து கீழாக காந்திய பாணியில் கத்தியின்றி-ரத்தமின்றிநடத்தப்படுகின்ற கவிழ்ப்புப் புரட்சியாகும். (இந்த விஷயத்தில் தன்னைத்தூக்கியெறிவதற்கு ஏதுவாகத் தன்னால் இயன்ற அனைத்து வசதிகளையும் செய்துஒத்துழைக்கிறது அரசு).

தனது கவுரவத்தைத் தகர்த்துவிட்டிருந்த பெரும் ஊழல்களிலிருந்து கவனத்தைத்திசை திருப்ப ஏதேனும் வழியை அரசு தேடிக்கொண்டிருந்த நேரம் அது. அதாவது,ஏப்ரல் 2011-ல் சில நாட்கள் அன்னா ஹசாரே "சாகும் வரை உண்ணாவிரதம்" இருந்தசமயம். புதிய ஊழல் தடுப்பு சட்ட முன்வடிவைத் தயாரிப்பதற்கானகூட்டுக்குழுவில் இடம்பெறுமாறு "டீம் அன்னா" (Team Anna) என்று தனக்குத்தானே நாமகரணம் சூட்டிக்கொண்ட சிவில் குழுவை அரசு அழைத்தது.

இதன்பிறகு, இரண்டாவது முறையாக அன்னா ஹசாரே "சாகும்வரை உண்ணாவிரம்"மேற்கொள்ளவிருந்த ஆகஸ்ட் 16-ஆம் நாள், உண்ணாவிரதம் தொடங்குவதற்குமுன்னதாகவே அல்லது சட்டவிரோத நடவடிக்கை எதனையும் மேற்கொள்வதற்குமுன்பாகவே அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதனால், ஜன்லோக்பால் மசோதாவை அமல்படுத்துவதற்கான போராட்டம், எதிர்ப்பைக்காட்டுவதற்கான உரிமைக்கான போராட்டத்துடனும், ஜனநாயகத்திற்கானபோராட்டத்துடனும் இணைக்கப்படலாயிற்று.

இந்த 'இரண்டாம் சுதந்திரப்போராட்டம்' தொடங்கிய சில மணிநேரத்திலேயே அன்னா விடுதலை செய்யப்பட்டார்.சமர்த்தராக அவர் சிறயை விட்டு வெளியேவர மறுத்துவிட்டார். திகார் சிறையில்கவுரவ விருந்தினர் போலத் தங்கியிருந்த அவர், பொது இடம் ஒன்றில்உண்ணாவிரதம் இருப்பதற்கான உரிமைகோரி சிறையிலேயே பட்டினிப் போரைத்தொடங்கினார். மூன்று நாட்களாகக் கூட்டமும், தொலைக்காட்சி வேன்களும்வெளியே காத்துக்கொண்டிருந்தபோது, தேசியத் தொலைக்காட்சி சானல்கள்அனைத்திலும் ஒளிபரப்பப்படுவதற்கான அன்னாவின் செய்திகளடங்கிய விடியோசுருள்களை ஏந்திக் கொண்டு 'டீம் அன்னா' உறுப்பினர்கள், மிகவும்பாதுகாப்புமிக்க அந்த சிறைக்குள் நுழைவதும், வெளியில் வருவதுமாகப்பரபரப்புடன் காணப்பட்டார்கள். (இதுபோன்ற வசதிவாய்ப்பு வேறு எவருக்கும்அளிக்கப்படுமா என்ன?)

இதற்கிடையே, வாரக்கடைசியில் நடக்கவிருந்த மாபெரும்காட்சிகளை அரங்கேற்றுவதற்கு வசதியாக, சேறும் சகதியுமாகக் காணப்பட்டராம்லீலா மைதானத்தைச் செப்பனிடும் பணியில் இரவு-பகல் பாராமல் டெல்லிமுனிசிபல் கார்ப்பரேஷனைச் சேர்ந்த 250 ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்; 15லாரிகள், ஆறு மண்ணள்ளி இட்டு நிரப்பும் இயந்திரங்களும்பயன்படுத்தப்பட்டன. பசிநோக்காமல், கண்துஞ்சாமல் கால்கடுக்க நின்றுகோஷங்களை உச்சரித்துக் கொண்டிருக்கும் கூட்டமும், நவீன கிரேன்காமிராக்களும் பார்த்துக்கொண்டிருக்க, இந்தியாவிலேயே அதிக ஃபீஸ்வாங்கும் டாக்டர்களின் கவனிப்புடன் அன்னா ஹசாரேயின் "சாகும்வரைஉண்ணாவிரதம்" மூன்றாம் கட்டத்தில் நுழைந்திருக்கிறது. "காஷ்மீர் முதல்கன்னியாகுமரி வரை இந்திய தேசமே ஓரணியாகத் திரண்டுள்ளதைப் பாரீர்!" எனத்தொலைக்காட்சி அறிவிப்பாளர்கள் நமக்குச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

அன்னா ஹசேரேயின் வழிமுறைகள் வேண்டுமானால் காந்தீய வழிமுறைகளாகஇருக்கலாம்; ஆனால் அவரது கோரிக்கைகள் அப்படிப்பட்டவை அல்ல என்பதுநிச்சயம். அதிகாரத்தைப் பரவலாக்குவதுகுறித்த காந்திஜியின்கருத்துக்களுக்கு முரணாக, ஜன் லோக்பால் மசோதா என்பது, மிகக் கொடூரமானஊழல் எதிர்ப்புச் சட்டமாகும்; இது, மிகவும் கவனமாகப்பொறுக்கியெடுக்கப்பட்ட மிகச்சிலரால் நிர்வகிக்கப்படுகின்ற,பல்லாயிரக்கணக்கான ஊழியர்களைக் கொண்ட, பூதாகாரமான அதிகாரவர்க்கஅமைப்பைக்கொண்டது; பிரதமர், நீதித்துறையினர், நாடாளுமன்ற உறுப்பினர்கள்தொடங்கி, சாதாரண கீழ்மட்ட அரசு அதிகாரிகள் உட்பட அதிகார வர்க்கம்முழுவதையுமே ஊடுருவிக் கண்காணிக்கின்ற அதிகாரம் படைத்தது. விசாரணைநடத்துதல், வேவுபார்த்தல், குற்றம்சாட்டுதல் ஆகிய அனைத்து அதிகாரங்களையும் கொண்டிருக்கும் . அதற்கென்று சிறைச்சாலைகள் மட்டும்தான் இருக்காது;மற்றபடி, ஏற்கனவே நம்மிடம் உள்ள ஊதிப்பெருத்து, செய்யும்காரியங்களுக்குப் பொறுப்பேற்காத, ஊழல் மலிந்த நிர்வாகத்தை எதிர்கொண்டுமுறியடிப்பதற்கானதொரு சுதந்திரமான நிர்வாகம் இது என்றுசொல்லப்படுகிறது.

இதனால் பயன் ஏற்படுமா இல்லையா என்பது, ஊழல் குறித்த நம் பார்வையில்தான்உள்ளது. ஊழல் என்பது சட்டம் சார்ந்த ஒரு விஷயம் மட்டும்தானா; நிதிமுறைகேடும் லஞ்ச லாவண்யம் மட்டும்தானா அல்லது சிறிய அல்லது மிகச்சிறியகுழுக்களிடம் அதிகாரம் குவிந்துள்ள படுமோசமான சமத்துவமற்ற சமுதாயஅமைப்பில் இப்போது ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கும் சமூகரீதியிலானபரிவர்த்தனையா? எடுத்துக்காட்டாக, பெரிய விற்பனைக்கூடங்கள் (shopping malls) நிறைந்ததொரு நகரத்தில் நடைபாதை வியாபாரம் தடைசெய்யப்பட்ட நிலையைநினைத்துப் பாருங்கள். பெரிய விற்பனைக் கூடங்களில் பொருட்களை வாங்கஇயலாத மக்களிடம் தனது பொருட்களை விற்கும் பொருட்டு, சட்ட மீறல்செய்வதற்காக, நடைபாதை வியாபாரியொருவர், குறிப்பிட்டபகுதியில் பணியில்உள்ள காவலருக்கும், நகராட்சி ஊழியருக்கும் லஞ்சம் கொடுக்கிறார் என்றுவைத்துக்கொள்வோம். அது அப்படியொரு பயங்கரமான விஷயமா என்ன?வருங்காலத்தில் அவர், லோக்பால் பிரதிநிதிக்கும் பணம்கொடுக்கவேண்டியிருக்குமோ?

சாதாரண மக்கள் எதிர்நோக்கும்பிரச்சனைகளுக்கான தீர்வு, சமுதாய அமைப்பில் உள்ள ஏற்றத்தாழ்வைநீக்குவதில் இருக்கிறதா அல்லது இன்னுமொரு அதிகார அமைப்பை ஏற்படுத்தி அதைமக்கள் சகித்துக்கொள்ளச்செய்வதில் இருக்கிறதா?

அன்னாவின் புரட்சிக்காக நிகழ்த்தப்படும் ஆட்டபாட்டங்கள், தீவிரதேசியவாதம், கொடியசைப்பு அனைத்துமே இட ஒதுக்கீட்டுக்கு எதிரானபோராட்டங்கள், உலகக்கோப்பை வெற்றி பவனிகள், அணுகுண்டு சோதனைசம்பந்தமான கொண்டாட்டங்கள் ஆகியவற்றிடமிருந்து கடன் பெறப்பட்டவை. அந்தஉண்ணாவிரதத்தை நாம் ஆதரிக்காவிட்டால், நாம் 'உண்மையான இந்தியர்கள்' அல்லஎன்று அவை நமக்குச் சமிக்ஞை காட்டுகின்றன.

இவர்கள் சொல்லும் 'உண்ணாவிரத' இலக்கணத்துக்குள், சந்தேகத்துக்குஆட்பட்டால்போதும் சுட்டுத்தள்ளி விடலாமென்கிற அதிகாரத்தை மணிப்பூரில்ஜவான்களுக்கு அளிக்கின்ற ஆயுதப்படையினருக்கான சிறப்பு அதிகாரச் சட்டத்தை(Armed Forces Special Powers Act) எதிர்த்துப் பத்தாண்டுகளுக்கும் மேலாகஉண்ணாவிரதம் மேற்கொண்டுள்ள இரோம் ஷர்மிளாவின் (இவருக்கு இப்போதுகட்டாயப்படுத்தி உணவளிக்கப்படுகிறது) விரதம் வராது; கூடங்குளத்தில்அணுமின் திட்டத்தை எதிர்த்து கிராம மக்கள் பத்தாயிரம்பேர் உண்ணாவிரதம்இருக்கிறார்களே அதுவும் இந்த இலக்கணத்தில் அடங்காது. "மக்கள்" என்றுஇவர்களால் அழைக்கப்படுபவர்களில், இரோம் ஷர்மிளாவின் உண்ணாவிரததைஆதரிக்கும் மணிப்பூர் மக்கள் வரமாட்டார்கள். ஜகத்சிங்க்பூரில் அல்லதுகலிங்கநகரில் அல்லது நியாம்கிரியில் அல்லது பஸ்தாரில் அல்லதுஜெய்தாபூரில் ஆயுதம் தாங்கிய போலீசாரையும், சுரங்கங்களைக்கொள்ளையடிக்கும் கும்பலையும் எதிர்த்து நிற்கிறார்களே அவர்களை இவர்கள்மக்களாக ஏற்க மாட்டார்கள். போபால் விஷவாயுக் கசிவினால்பாதிக்கப்பட்டவர்களும், நர்மதா பள்ளத்தாக்கில் வீடுவாசலை இழந்து இடம்பெயரச்செய்யப்பட்டவர்களும் இவர்களுக்கு மக்களாகத் தோன்றுவதில்லை.நொய்டாவிலும், புனேயிலும், அரியானாவிலும், நாட்டின் வேறெந்த பகுதியிலும்நிலம் கையகப்படுத்தலை எதிர்த்து நிற்கும் விவசாயிகளும் அவர்களைப்பொறுத்தவரை மக்களாக மாட்டார்கள்.

ஜன் லோக்பால் மசோதா நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுநிறைவேற்றப்படவில்லையென்றால், பட்டினிகிடந்து மரித்துப்போவேன் என்றுஅச்சுறுத்திக்கொண்டிருக்கின்ற 74 வயது முதியவரை அவதானிப்பதற்காகக் கூடிநிற்கிறார்களே அந்தப் பார்வையாளர்கள்தான் இவர்களைப் பொறுத்தமட்டில்'மக்கள்'. பசித்த மக்களின் வயிற்றை நிரப்ப ஒருசில மீன்களையும்,ரொட்டித்துண்டுகளையும் பன்மடங்காகப் பெருகச் செய்தாரே ஏசுநாதர்,அதனைப்போன்றே, பத்தாயிரக்கணக்கில் கூடியிருந்த மக்களைப் பத்துலட்சம்பேராக மாற்றிக்காட்டும் அற்புதத்தை நமது தொலைக்காட்சி சானல்கள்நிகழ்த்திக்கொண்டிருந்தன. "நூறு கோடி மக்களின் குரல் இங்கேஎதிரொலிக்கிறது" என்றும் "இந்தியாதான் அன்னா" என்றும் நமக்குச்சொல்லப்படுகிறது.

மக்களின் குரல் என்று வர்ணிக்கப்படும் இந்த நவீன அவதாரப்புருஷர் யார்என்றுதான் பார்க்கலாமே! விசேஷம் என்னவென்றால், உடனடியாகக் கவனம் செலுத்தவேண்டிய முக்கியமான பிரச்சனைகள்குறித்து இவர் குரல்கொடுத்து நாம்கேட்டதே இல்லை. அவர் வாழும் பகுதிக்கு அருகாமையிலேயேநடந்துகொண்டிருக்கும் விவசாயிகளின் தற்கொலைகள் குறித்தும், இன்னும்கொஞ்சம் அப்பால் [மாவோயிஸ்டுகளுக்கு எதிராக நடத்தப்படும்] 'ஆபரேஷன்கிரீன் ஹன்ட்' (operation green hunt) என்னும் நடவடிக்கைகுறித்தும் அவர்வாய்திறக்க மாட்டார். சிங்கூர், நந்திகிராம், லால்கர், பாஸ்கோபிரச்சனைகள் குறித்தும், விவசாயிகள் போராட்டம் குறித்தும் பேசுவதற்குஅவரின் நா எழாது. இந்தியாவின் மத்தியப் பகுதியில் உள்ள காடுகளில்ராணுவத்தை அனுப்புவது குறித்த அரசின் திட்டம் குறித்து அவருக்குக்கருத்து எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை.

ராஜ் தாக்ரேயின் மராட்டிய மகிமைகுறித்த வெறியுணர்வுப் பிரச்சாரத்தை ஆதரிக்கும் அவர், குஜராத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக 2002-ல்நிகழ்த்தப்பட்ட படுகொலைகளை மேற்பார்வையிட்ட அந்த மாநில முதல்வரின்'வளர்ச்சி முன்மாதிரி'யை வானளாவப்புகழ்ந்திருக்கிறார். (வெளிப்படையாகஎதிர்ப்புக்குரல்கள் எழும்பியவுடன், தனது அறிக்கையைத்திரும்பப்பெற்றுக்கொண்டபோதிலும், அவரது வியப்புக்குரிய பாராட்டைதிரும்பப்பெற்றுக்கொண்டதாகத் தெரியவில்லை).ஆர்ப்பாட்டக் கூக்குரல்கள் எழுப்பப்படும் இந்த நிலையிலும், நிதானமானபத்திரிகையாளர்கள் தமக்குரிய கடமையைச் செய்துகொண்டுதான் இருக்கிறார்கள்.ஆர்.எஸ்.எஸ். அமைப்புடன் அன்னாவின் பழைய தொடர்புகள்பற்றிய தகவல்கள்இப்போது நமக்குக் கிடைத்துள்ளன. ராலேகான் சித்தி கிராமத்தில் அன்னாஅறிமுகம் செய்த கிராம சமூகத் திட்டத்தை ஆய்வு செய்த முக்குல் சர்மா,கடந்த 25 வருடங்களாக அந்த கிராமத்தில் ஊராட்சி மன்றத்திற்கோ அல்லதுகூட்டுறவு சங்கங்களுக்கோ தேர்தல் நடைமுறைப்படுத்தப் படவில்லை என்றுகூறக்கேட்டிருக்கிறோம்.

'அரிஜனங்கள்' குறித்த அன்னாவின் கருத்தும்நமக்குத் தெரியும்."காந்தி கண்ட கனவின்படி, ஒவ்வொரு கிராமத்திலும் ஒருசமார், சுனார், கும்ஹார் மற்றும் இத்யாதி ஜாதியினர் இருக்கவேண்டும்.அவரவர்கள் தம் தொழிலுக்கேற்பத் தம் வேலைகளைச் செய்துவரவேண்டும்; இதனால்,கிராமம் தன்னிறைவு பெறும். இதைத்தான் நாங்கள் ராலேகான் சித்தியில்நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கிறோம்," என்கிறார் அன்னா.'சமத்துவத்திற்கான இளைஞர் இயக்கம்' என்ற பெயரில் இயங்கும் இடஒதுக்கீட்டுஎதிர்ப்பு ("தகுதி"க்கு ஆதரவு) இயக்கத்தினருடன் அன்னா டீம்கூடிக்குலாவுவதில் வியப்பேதும் இருக்கிறதா என்ன?

'கோகா-கோலா' மற்றும்'லெமன் ப்ரதர்ஸ்' உள்ளிட்ட நிறுவனங்களிடமிருந்து தாராளமாக நிதியைப்பெறும் தொண்டுநிறுவனங்களின் பிடியில் இருக்கும் சிலரால் இந்தப்போராட்டம் வழிநடத்தப்படுகிறது. டீம்அன்னாவின் முக்கியப் புள்ளிகளானஅர்விந்த் கேஜ்ரிவால் மற்றும் மணீஷ் சிஸோதியா ஆகியோர் நடத்துகின்ற'கபீர்' எனும் தொண்டு நிறுவனம், கடந்த மூன்று ஆண்டுகளில் ஃபோர்டுஃபவுண்டேஷனிடமிருந்து 4,00,000 டாலர் நிதி பெற்றுள்ளது.

'ஊழலுக்கு எதிராகஇந்தியா' (India Against Corruption) இயக்கத்திற்கு நிதியளிக்கும்அமைப்புகளில், அலுமினியம் உற்பத்தி செய்கிற, துறைமுகங்களைஉருவாக்குகின்ற, சிறப்புப் பொருளாதார மண்டலங்களை அமைக்கவல்ல, ரியல்எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களை நடத்துகின்ற கம்பெனிகளும்,ஃபவுண்டேஷங்களும் உண்டு. ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் சொத்துக்களை உடையநிதி சாம்ராஜ்யங்களைக் கட்டியாளும் அரசியல்வாதிகளுடன் இந்தக்கம்பெனிகளும் ஃபவுண்டேஷங்களும் நெருங்கிய தொடர்பு கொண்டிருப்பவை.இவற்றில் சிலவற்றுக்கு எதிராக ஊழல் சம்பந்தமாகவும், இதரகுற்றங்களுக்காகவும் இப்போது விசாரணை நடந்துவருகிறது. இந்த நிறுவனங்கள்மத்தியில் இப்போது உற்சாகம் கரைபுரண்டு ஓடுவதேன்?

விக்கிலீக்ஸ் மூலமான இக்கட்டான நிலையைத் தோற்றுவிக்கும் தகவல்கள்வெளியான அதே நேரத்தில்தான், பெரிய கார்ப்பரேஷன்களும், மூத்தபத்திரிகையாளர்களும், அரசின் அமைச்சர்களும், காங்கிரஸ் மற்றும் பாரதீயஜனதாக் கட்சியைச் சேர்ந்த அரசியல்வாதிகளும் பலவிதங்களில் கூட்டுசேர்ந்துசெயல்பட்டதன் விளைவாக மக்களின் நிதியிலிருந்து லட்சக்கணக்கானகோடிக்கணக்கான ரூபாய் முறைகேடாக உறிஞ்சியெடுக்கப்பட்ட 2-ஜி அலைக்கற்றைஉள்ளிட்ட பல பெரிய ஊழல்கள் வெடித்துக்கிளம்பிய அதே காலகட்டத்தில்தான்,ஜன் லோக்பால் மசோதாவுக்கான இயக்கமும் வலுப்பெறலாயிற்று என்பதை நினைவில்கொள்ளுங்கள்.

கடந்த பல ஆண்டுகளில் முதன்முறையாக, பத்திரிகையாளர்களாகஇருந்துகொண்டே பேரம் பேசியவர்கள் வெட்கித் தலைகுனிய வேண்டியதாயிற்று.இந்தியக் கார்ப்பரேட் நிறுவனங்களின் பெரிய அதிபர்கள் சிறையில் கம்பி எண்ணவேண்டியதாயிற்று. இது உண்மையா அல்லவா?

தனது மரபார்ந்த பொறுப்புக்களிலிருந்து அரசு கழன்றுகொள்ள, (குடிநீர்விநியோகம், மின்சாரம், போக்குவர்த்து, தொலைத்தொடர்பு, சுரங்கம்,மருத்துவம், கல்வி) ஆகிய பணிகளை பெரும் கார்ப்பரேஷன்களும், தொண்டுநிறுவனங்களும் மேற்கொள்ளத்தொடங்கியுள்ள இந்த சமயத்தில், கார்ப்பரேட்நிறுவனங்களுக்குச் சொந்தமான பயங்கரசக்தியும் வீச்சும் கொண்ட செய்திநிறுவனங்கள், மக்களின் எண்ணவோட்டங்களைக் கட்டுப்படுத்த எத்தனிக்கின்றஇந்த நேரத்தில், இத்தகு அமைப்புகள்-அதாவது, கார்ப்பே ரஷன்கள், ஊடகங்கள்,தொண்டு நிறுவனங்கள் ஆகியவையும் லோக்பால் மசோதாவின் வரம்புக்குள்கொண்டுவரப்பட வேண்டும் என்று எவரும் எதிர்பார்ப்பது இயல்புதானே? ஆனால்,இவர்கள் முன்மொழிந்திருக்கிற மசோதாவில் இந்த அமைப்புகள் அனைத்தும்விடப்பட்டிருக்கின்றன.

மற்ற அனைவரைக் காட்டிலும் உரத்துக் குரல் கொடுப்பதன் மூலமாகவும்,மோசமான அரசியல்வாதிகள், அரசின் ஊழல் ஆகிய விவகாரங்களைப் பற்றிக்கொட்டிமுழக்குவதன் மூலமாகவும், இந்த அமைப்புகளை மிகத்திறமையாக நழுவவிட்டிருக்கிறது டீம் அன்னா. அரசைமட்டுமே மோசமாகச் சித்தரிப்பதன்மூலம்,பொதுப்பணிகளிலிருந்து அரசு விலகிக்கொள்ள வேண்டுமெனவும், மேலும்தனியார்மயமாக்க வேண்டும்; பொதுக்கட்டுமானங்களை, இயற்கை வளங்களைப்பயன்படுத்திக் கொள்ள வழிவகுக்க வேண்டும் எனவும் அழைப்புவிடுக்கும்நோக்கில், தமக்கென்று உயர்பீடமொன்றை அவர்கள் உருவாக்கிக்கொண்டிருக்கிறார்கள். இப்படியே போனால், கார்ப்பரேட் ஊழல் என்பதுசட்டரீதியாக்கப்பட்டு, பேரத்திற்கான கட்டணம் என்றுகூட அதற்குப் புதியநாமகரணம் சூட்டிவிடும் காலம் வெகுதொலைவில் இல்லை.

நாள் ஒன்றுக்கு இருபது ரூபாய் மட்டுமே வருமானம் ஈட்டுகின்ற 830 மில்லியன்மக்கள், அவர்களை மேலும் வறியவர்களாக்குகின்ற, இந்த நாட்டை ஒரு உள்நாட்டுயுத்தத்திற்கு இட்டுச்செல்கின்ற கொள்கைகளுக்கு வலுவூட்டுவதன்மூலம்உண்மையிலேயே பயன் பெற இயலுமா என்ன?

நாடாளுமன்ற சட்டமன்ற அமைப்புகள், கிரிமினல்களையும், மக்களுடன் தொடர்புஅறுந்துபோன கோடீஸ்வர அரசியல்வாதிகளையும் கொண்டவையாக உள்ள நிலையில்,இந்தியாவின் பிரதிநிதித்துவ ஜனநாயகத்தின் தோல்விதான் இந்த மோசமானநெருக்கடியைத் தோற்றுவித்துள்ளது. இந்த சூழலிம் எந்தவொரு ஜனநாயகஅமைப்பும் சாதாரண மக்கள் எளிதாக அணுகத்தக்கதாக இல்லை.

டீம் அன்னாவைச்சேர்ந்தவர்கள் கொடியை வேகமாக அசைத்துக் காட்டுவதைக் கண்டு ஏமாந்துபோய்விடாதீர்கள். ஒருவிதமான மேலாதிக்கப் படுகுழியில் இந்தியாவைத்தள்ளிவிடுவதற்கான போர்க்களத்தை இப்போது நாம் கண்டுகொண்டிருக்கிறோம். இது, ஆப்கானிஸ்தானத்து போட்டித் தளகர்த்தர்கள் நடத்துகின்ற யுத்தத்திற்கு இணையான, அதைவிடவும் மோசமான இழப்பினை ஏற்படுத்திவிடக் கூடியயுத்தமாகும்.

Saturday, September 3, 2011

சமூக நீதிக்கான குரல்

"புகழின்
வாரிசுகளே !
புனையப்படாத காவியத்தின் நாயகர்களே !
மகாசக்தியின் புத்திரர்களே !
அவர்களுக்கும்
மற்றவர்க்கும்
நம்பிக்கையாக வந்தவர்களே !
தூக்கம் நீங்கிய
சிங்கங்களாக எழுங்கள் ! எவரும்
முறியடிக்க முடியாத
எண்ணற்ற
வீரர்களாக எழுங்கள் !


நீங்கள்
உறங்கியபோது
உங்கள் மீது விழுந்த
சங்கிலிகளை
பனித்துளிகளைப் போலத்
தரையில் மோதி உடையுங்கள்.


நீங்கள் பலர்
அவர்கள் சிலர்."


-- என்ற கவிஞர் ஸெல்லியின் வார்த்தைகளை மெய்ப்பிக்கின்ற வகையில்
வருகின்ற ஆகஸ்ட்டு 10 சென்னையில் சங்கமிப்போம்.


தோழமையுடன்,
மு.இராஜாராம்,(புலியூரான்)
எல்.ஐ.சி.


"
சாதிய ஒடுக்குமுறைகள் தலித்,பழங்குடியினரின் அரசியல்,பொருளியல்,சமுக வாழ்வில் பெரும் இடைவெளியை எற்படுதிருக்கிறது. அரசின் வரவு செலவுத்திட்டங்களும் ஒடுக்கப்பட்ட மக்களை வஞ்சித்த நிலையில் 32 ஆண்டுகளுக்கு முன்பாக அறிமுகப்படுத்தப்பட்டவையே பட்டியலின, பழங்குடி இனத்தவருக்கான சிறப்பு உட்கூறு திட்டங்கள். ஆனாலும் வஞ்சனை தொடர்ந்தது.சிறப்பு உட்கூறு திட்டங்களையும் நீர்த்துப்போக செய்தார்கள் . தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி கணக்கு கேட்கிறது. தலித் பழங்குடியினர் இழந்தது எவ்வளவு ? ஒதுக்கப்பட்டும் திருப்பிவிடப்பட்ட தொகை எவ்வளவு ? துணைத்திட்டங்கள் நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளை எட்டுவது எவ்வாறு ? இப்படி
 
வஞ்சிக்கப்பட்டவைகளை திரும்பப்பெறும் வரை ஓயாது நம் குரல்; ஒவ்வொரு ரூபாயும் பட்டியலின மக்களின் கைவசம் ஆகும் வரை"