TNUEF-தீண்டாமை ஒழிப்பு முன்னணி

 பரமக்குடி துப்பாக்கிச் சூடு

சி.பி.ஐ விசாரணைக்கு உயர்நீதிமன்றம் 
உத்தரவு !

வரவேற்கிறோம் !

நீதிக்காகப் போராடுகிற 
தீண்டாமை ஒழிப்பு முன்னணிக்குப் 
பாராட்டுக்கள் !
________________________________________

தென்மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பு 
__________________________________________________


-----------------------------------------------------------------------------------------------------------------
உத்தப்புரம் முத்தாலம்மன் கோவிலில் தலித் மக்கள் வழிபாடு
மதுரை, நவ. 10-

உத்தப்புரம் முத்தாலம்மன்-மாரியம்மன் கோவிலுக்கு தலித்மக்கள் வியாழனன்று மாலை சென்று உணர்ச்சிப் பெருக்குடன் சாமி கும்பிட்டனர்.

மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகாவில் உள்ளது உத்தப்புரம். இங்கு தலித் மக்களை யும் மற்றொரு சமூகத்தினரை யும் பிரிக்கும் வகையில் தீண்டாமைச்சுவர் கட்டப்பட்டிருந்தது. உத்தப்புரம் தீண்டாமைச் சுவரை அகற்றவேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட் சியும் தீண்டாமை ஒழிப்பு முன்னணி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளும் பல்வேறு போராட்டங்களை நடத்தின. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலளார் பிரகாஷ் காரத் தீண்டாமைச் சுவரை பார்வையிட வருகிறார் என்ற சூழலில், அன்றைக்கு பொறுப்பில் இருந்த திமுக அரசு தீண்டாமைச் சுவரின் ஒரு பகுதியை இடித்து பொதுப் பாதை ஏற்படுத்திக்கொடுத்தது.

இது தவிர அரசமர வழிபாட்டு உரிமை, கோவில் வழிபாட்டு உரிமை, நிழற்குடை கட்டுவது, தலித் மக்கள் வாழும் பகுதிக்குள் செல்லும் சாக்கடையை திருப்பிவிடுவது போன்ற பிரச்சனைகளும் உள்ளன. உத்தப் புரம் தலித்மக்களின் கோரிக் கை சட்டமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும் தொடர்ந்து எழுப் பப்பட்டு வருகிறது. நிழற்குடை அமைக்க கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் எம்.பி. நிதி ஒதுக்கீடு செய் துள்ளார். அரசமர வழிபாட்டு உரிமை, முத்தாலம்மன் கோவிலுக்கு செல்வது போன்ற பிரச் சனைகளை திமுக அரசு தீர்க்க வில்லை.

உத்தப்புரத்தில் நடை பெற்ற விரும்பத்தகாத சம்பவங் களால் முத்தாலம்மன், அரசமரவளாகம் காவல்துறையின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப் பட்டிருந்தது. கோவிலும் பூட்டி சீல் வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அஸ்ராகார்க் முன் னிலையில் தலித்மக்களும் மற் றொரு சமூகத்தினரும் பேச்சு வார்த்தை நடத்தினர். இப்பேச்சுவார்த்தையில், உத்தப்புரம் காவல்நிலையம் உள்ள இடத் தில் நிழற்குடைகட்டுவது, முத்தாலம்மன் கோவிலுக்குள் இருதரப்பு மக்களும் சென்று வருவது, இருதரப்பிலும் உள்ள வழக்குகளை வாபஸ் பெறுவது உள்ளிட்ட பல கோரிக்கை களில் உடன்பாடு காணப்பட்டது.

இந்நிலையில் வியாழ னன்று உத்தப்புரம் தலித் மக்க ளும்- மற்றொரு சமூகத் தினரும் ஒற்றுமையுடன் முத்தாலம்மன்-மாரியம்மன் கோவிலுக்குள் சென்று வழிபாடு நடத்தினர்.

முன்னதாக வியாழனன்று காலை முத்தாலம்மன் கோவில், அரசமர வளாகம் தண்ணீர் ஊற்றி கழுவி சுத்தம் செய்யப்பட்டது. தலித் மக்களும், மற்றொரு தரப்பினருடன் இணைந்து காலை 9 மணிக்கு கோவிலுக்குள் செல்வார்கள் என எதிர் பார்க்கப்பட்டது. தொடர்ந்து பல கட்ட பேச்சுவார்த்தைக்குப் பின் மாலை 4.30 மணியளவில் கோவிலுக்குள் சென்றனர்.

முன்னதாக மதுரை தெற்குத் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இரா.அண்ணாதுரை, தீண்டாமை ஒழிப்பு முன்னணி யின் மாவட்ட அமைப்பாளர் எம்.தங்கராசு, அமைப்பின் மாநில நிர்வாகி பொன்னுத்தாய், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் செல்லக்கண்ணு, மாவட்டக்குழு உறுப்பினர் முத்துராணி, வழக் கறிஞர் உ.நிர்மலாராணி ஆகியோர் முத்தாலம்மான் கோவிலுக்குச் சென்ற தலித் மக்களை வாழ்த்தி வழியனுப்பி வைத்தனர்.

சங்கரலிங்கம், பொன்னையா உள்ளிட்ட தலித்மக்கள் பூஜைப் பொருட்களுடன் தலித் மக்கள் வசிக்கும் பகுதியில் கட்டப்பட்டுள்ள கலையரங்கம் அருகிலிருந்து புறப்பட்டு கோவில் வளாகத்தை அடைந்தனர். கோவிலுக்குள் நுழைந்த அவர் களை மற்றொரு சமூகத்தினர் வரவேற்று அழைத்துச்சென்றனர். பின்னர் கோவில் பூசாரி முத்தாலம்மனுக்கு பூஜைகள் செய்தார். தொடர்ந்து அவர்கள் சாமி கும்பிட்டுவிட்டு மகிழ்ச்சியுடன் விடைபெற்றனர்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சங்கரலிங்கம், பொன்னையா ஆகியோர், கோவிலுக்குள் நாங்கள் சென்று திரும்பியது மகிழ்ச்சியளிக்கி றது. மனநிறைவைத் தருகிறது. இனிமேல் உத்தப்புரத்தில் இரு பிரிவினருக்கிடையே மோதல் சம்பவமே வராது. இந்தநிகழ்வு எங்களுக்கிடையே இருந்த பிணக்குகளை தீர்த்து விட்டது. ஒற்றுமையுடன் வாழ்வோம். விரைவில் கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடக்கப் போகிறது. சமபந்தி போஜனம் நடைபெறுவது குறித்தும் யோசித்துள்ளார்கள். அனைத்து விஷயங்களும் இனி நல்லபடி யாகவே நடக்கும் என்றார்.

முன்னதாக மற்றொரு சமூகத்தினரிடம் இணக்கமான சூழலை உருவாக்குவதற்கு, உத்தப்புரம் மக்களை ஒற்றுமைப்படுத்துவதற்கு 
ஆதிமூலம், சோமசுந்தரம் ஆகியோர் பல்வேறு முன்முயற்சிகளை எடுத்துள்ளனர்.

மதுரை எஸ்.பி.க்கு பாராட்டு

உத்தப்புரத்தில் இரு தரப்பு மக்களையும் கோவிலுக்குள் அழைத்துச்செல்வதற்கும், மற்ற கோரிக்கைகளை நிறைவேற் றுவதற்கும், ஒரு சமாதான உடன்பாடு ஏற்படுவதற்கும் மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அஸ்ராகார்க் பெரும் முயற்சி எடுத்துள்ளார். கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக அவர் இவ்விஷயத்தில் தீவிர கவனம் செலுத்தி யுள்ளார். இவருக்கு உறுதுணையாக மாவட்ட காவல் உதவி கண்காணிப்பாளர் மயில் வாகனனும் இருந்துள்ளார். வியாழனன்று காலை உதவி கண்காணிப்பாளர் மயில்வாகனன், உத்தப்புரத்தில் நடக்கும் ஒவ்வொரு முன்னேற்றத்தையும் காவல் கண்காணிப்பாளருக்கு தெரிவித்துக்கொண்டே இருந்தார். பிற்பகலில் இரு தரப்பினரும் கோவிலுக்கு செல்ல தயார் நிலையில் உள்ள னர் என்ற செய்தியை மயில்வா கனன் தெரிவிக்க, அஸ்ராகார்க் உடனடியாக புறப்பட்டு உத்தப் புரம் வந்தடைந்தார். நல்ல நிகழ்வை நடத்திய எஸ்.பி.க்கும், உதவி காவல் கண்கா ணிப்பாளருக்கும் மக்கள் நன்றி தெரிவித்துக்கொண்டனர்.

சங்கரலிங்கம், பொன்னையா ஆகியோர் சால்வை அணிவித்து கவுரவித்தனர். இது குறித்து அஸ்ரா கார்க் கூறு கையில், இரு சமூக மக்களின் ஒரு மகிழ்ச்சிகரமான நிகழ்வைக்காண நான் 120 கி.மீ., வேகத்தில் வந்தேன் என்றார்.



ஜி.ராமகிருஷ்ணன், பி.சம்பத் வரவேற்பு

உத்தப்புரம் முத்தாலம்மன் கோவிலில் தலித் மக்கள் வழிபாடு நடத்தியுள்ளதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செய லாளர் ஜி.ராமகிருஷ்ணன் வரவேற்பும், மகிழ்ச்சியும் தெரிவித்துள்ளார்.

தீண்டாமை ஒழிப்பு முன்னணி

தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலத்தலைவர் பி.சம்பத், மாநில பொதுச்செயலாளர் கே.சாமுவேல்ராஜ் ஆகியோர் விடுத்துள்ள அறிக்கையில், முத்தாலம்மன் கோவிலில் தலித்மக்கள் வழிபாடு நடத்தி யுள்ளதற்கு வரவேற்பும் மகிழ்ச்சியும் பாராட்டும் தெரிவித்துள்ளனர். இதற்கு துணை நின்ற மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அஸ்ராகார்க் மற்றும் உரிய ஏற்பாடு செய்த மாவட்ட நிர்வாகத்திற்கும் பாராட்டு தெரிவித்துள்ளனர். வழிபாட்டுக்கு வந்த தலித் மக்களை வரவேற்ற உத்தப்புரம் மக்கள் அனைவருக்கும் பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்வதாக குறிப்பிட்டுள்ளனர்.
          




---------------------------------------------------------------------------------------------------------------------------------------
"எங்கள் நிலை யாருக்கும் நேரக்கூடாது"
பாதிக்கப்பட்ட வாச்சாத்தி கிராம பெண்ணின் குரல் பதிவு கீழே தரப்பட்டுள்ளது வலைதள உதவியுடன் பகிர்க
 http://www.bbc.co.uk/tamil/multimedia/2011/09/110929_vaachaathivictim.shtml


தருமபுரி, செப்.29: 19 ஆண்டுகளாக பரபரப்பாக நடந்து வந்த வாச்சாத்தி பாலியல்
வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த 215 பேரும் குற்றவாளிகள் என நீதிபதி
குமரகுரு அறிவித்துள்ளார். இதில் வனத்துறையினர் 17 பேர் மீதான பாலியல் பலாத்கார
குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டது. 17 பேரில் 12 பேருக்கு 10 ஆண்டு கடுங்காவல்
தண்டனையும் 5 பேருக்கு 7 ஆண்டு கடுங்காவலும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.
மற்றவர்களுக்கு ஓர் ஆண்டு முதல் மூன்று ஆண்டு வரை சிறை தண்டனை
விதிக்கப்பட்டுள்ளது. இன்னும் சிலர் சில பிரிவுகளில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இன்று காலை 10.30 மணிக்கு நீதிமன்றத்துக்கு வந்த நீதிபதி குமரகுரு இதர
வழக்குகளை விசாரித்துவிட்டு 11 மணியளவில் வாச்சாத்தி வழக்கை விசாரித்தார்.
பின்னர் இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள 215 பேரும் குற்றவாளிகள் என
அறிவித்து குற்றவாளிகளின் கருத்தைக் கேட்டார்.அவர்களில் பெரும்பாலானோர் தாங்கள்
குற்றவாளிகள் அல்ல. சம்பவம் நடந்த இடத்தில் தாங்கள் இல்லை என்பதால் குறைந்தபட்ச
தண்டனை வழங்குமாறு கேட்டுக் கொள்கிறோம் எனக் குறிப்பிட்டனர்.

இதைத்தொடர்ந்து குற்றவாளிகளின் வழக்கறிஞர்கள் வாதாடுகையில், இந்த வழக்கில்
குற்றம்சாட்டப்பட்ட அனைவருமே அரசு ஊழியர்கள் என்றும் அவர்களில் பெரும்பாலானோர்
சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளனர் என்றும் அதுவே அவர்களுக்கு பெரிய தண்டனை என்றும்
தெரிவித்தனர்.மேலும் அரசு ஊழியர்களான அவர்கள் அரசுப் பணியைத் தான் செய்தனர்.
இந்த வழக்கு சந்தனக் கட்டை கடத்தல் தொடர்பானது என்பதால் இதில் வழங்கப்படும்
தீர்ப்பு சந்தனக் கட்டை கடத்தல்காரர்களுக்கு சாதகமாக அமைந்து விடக்கூடாது என்று
தெரிவித்தனர்.

இந்த வாச்சாத்தி பாலியல் வழக்கில் மொத்தம் 269 பேர் மீது
குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
அவர்களில் 155 பேர் வனத்துறை அலுவலர்கள்.
108 பேர் போலீஸ்காரர்கள்.
6 பேர் வருவாய்த் துறை ஊழியர்கள்.
அவர்களில் 54 பேர் மரணமடைந்துவிட்டனர்.

இந்த வழக்கின் விவரம்:தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே வாச்சாத்தி மலைக்
கிராம‌‌ப் பகுதியில் சிலர் சந்தனமரங்களை வெட்டி கடத்துவதாக கடந்த 1992-ம் ஆண்டு
வனத்துறையினருக்கு புகார் வ‌ந்தது தொடர்பான விசாரணையின்போது சந்தன கட்டை
கடத்தலுக்கும், தங்களுக்கும் எந்த வித தொடர்பும் இல்லை என்று வாச்சாத்தி கிராம
பொதுமக்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து விசாரணை நடத்திய
கூட்டுக்குழுவினர் வாச்சாத்தி கிராமத்தை சேர்ந்த 90 பெண்கள், 28 குழந்தைகள், 15
ஆண்கள் உள்பட மொத்தம் 133 பேரை கைது செய்தனர். இந்த நிலையில் வாச்சாத்தி
பகுதியில் கூட்டுக்குழுவினர் சோதனை நடத்தியபோது மலைவாழ் மக்கள் சமூகத்தை
சேர்ந்த 18 பெண்களை கூட்டுக்குழுவில் இடம்பெற்ற வனத்துறை, காவல்துறையை சேர்ந்த
பலர் பாலியல் பலாத்காரம், வன்கொடுமைக்கு உட்படுத்தியதாக கிராம மக்கள் தரப்பில்
பரபரப்பான புகார் தெரிவிக்கப்பட்டது.இந்த புகார் தொடர்பாக முன்னாள் எம்எல்ஏ
அண்ணாமலை 1992-ம் ஆண்டு ஜூன் 22-‌ம் தேதி அரூர் காவ‌ல் நிலையத்தில் புகார்
செய்தார். இந்த புகார் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனையடுத்து
தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க பொதுச்செயலாளர் சண்முகம், நிர்வாகிகள் உ‌ச்ச
‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் மனு தாக்கல் செய்தனர்.

அந்த மனுவை விசாரித்த உ‌ச்ச ‌நீ‌தி‌ம‌ன்ற‌ம், வாச்சாத்தி கிராமத்தில் கூட்டுக்
குழுவினர் சோதனையின்போது நடந்தது என்ன என்பது தொடர்பாக முழுமையான விசாரணை
நடத்தவும், விசாரணைக்கு பின் நடந்த சம்பவங்கள் தொடர்பான அறிக்கையை தாக்கல்
செய்யவும் த‌‌மிழக அரசுக்கு உத்தரவிட்டது.இதனைத் தொடர்ந்து தாழ்த்தப்பட்டோர்
மற்றும் பழங்குடியினர் நல ஆணையத்தின் தென்மண்டல ஆணையர் பாமதி தலைமையிலான
குழுவினர் வாச்சாத்தி கிராமத்தில் நேரில் விசாரணை நடத்தியது. இந்த குழுவின்
அறிக்கை ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் தாக்கல் செய்யப்பட்டதை‌த் தொடர்ந்து இந்த
தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த ‌நீ‌திம‌ன்ற‌ம் உத்தரவிட்டது.
‌நீ‌திம‌ன்ற‌ம் உ‌த்தர‌வி‌ன்பே‌ரி‌ல் காவ‌ல்துறை‌யின‌ர் வழக்கு பதிவு செய்து
விசாரணை நடத்தின‌ர்.இந்த நிலையில் கடந்த 1996ஆம் ஆண்டு இந்த வழக்கு சி.பி.ஐ.
விசாரணைக்கு மாற்றப்பட்டது.

கடந்த 2008ஆம் ஆண்டு பிப்ரவரி 17-‌ம் தேதி இந்த வழக்கின் விசாரணை தருமபுரி
மாவட்ட அமர்வு ‌நீ‌திம‌ன்ற‌த்து‌க்கு மாற்றப்பட்டு விசாரணை தொடர்ந்து நடந்து
வந்தது.இந்த நிலையில் வாச்சாத்தி சம்பவத்தின்போது தர்மபுரி மாவட்டத்தில்
பணிபுரிந்த ஆட்சியர், மாவட்ட காவ‌ல்துறை க‌ண்கா‌ணி‌ப்பாள‌ர், உதவி ஆட்சியர்
ஆகியோரை வழக்கில் சேர்த்து விசாரிக்க வேண்டும் என்று குற்றம்
சா‌ற்றப்பட்டவர்கள் தரப்பை சேர்ந்த 7 பேர் தருமபுரி அமர்வு
‌நீ‌திம‌ன்ற‌த்‌‌தில் மனுதாக்கல் செய்தனர்.இந்த மனுவை ‌நீ‌திம‌ன்ற‌ம்‌
‌நிராக‌ரி‌த்தது.

இது தொடர்பாக சென்னை உய‌ர் ‌‌நீ‌திம‌ன்ற‌த்தில் தாக்கல் செய்யப்பட்ட மேல்
முறையீட்டு மனுவும் ‌நிராக‌ரி‌க்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து வாச்சாத்தி வழக்கு
தொடர்பான விசாரணையை விரைவுபடுத்தி முடிக்க உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌ம்
உத்தரவிட்டது.பின்னர் வாச்சாத்தி வழக்கின் இறுதி கட்ட விசாரணை தர்மபுரி மாவட்ட
அமர்வு ‌நீ‌திம‌ன்ற‌த்தில் கடந்த ஜூலை 5-‌ம் தேதி தொடங்கி தொடர்ந்து
நடந்துவந்தது. மாவட்ட முதன்மை நீதிபதி குமரகுரு முன்பு சி.பி.ஐ. மற்றும்
குற்றம்சா‌ற்றப்பட்டவர்கள் தரப்பு வழ‌க்க‌றிஞ‌ர்கள் ஆஜராகி வாதாடினார்கள்.



மேலே உள்ள செய்தி தினமணி இணைய தளத்திலிருந்து எடுக்கப்பட்டது. ஒரு செய்தியை
ஊடகங்கள் மறைக்க முயற்சி செய்கின்றன. முன்னாள் எம்.எல்.ஏ அண்ணாமலை என்று
போடும்போது அவர் சி.பி.எம்மை சேர்ந்தவர் என்று போடுவதில்லை. மலை வாழ் மக்கள்
சங்கத்தின் தலைவர் சண்முகம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில
செயற்குழு உறுப்பினராக தற்போது இருக்கிறார். வழக்கு தொடர்ந்தது,
போராடியது மார்க்சிஸ்ட்
கம்யூனிஸ்ட் கட்சி என்பது குறிப்பிடத்தக்கது.

கணேஷ்.

பாதிக்கப்பட்ட பெண்களுக்கு கருணாநிதி திடீர் நிதியுதவி அறிவித்தது ஏன்?  வாச்சாத்தி வழக்கு விசாரணைக்கே வராமல் பார்த்துக் கொண்டதுதான் திமுக ஆட்சி-பெ.சண்முகம் விமர்சனம்
சென்னை, செப். 30-

1996ம் ஆண்டு முதல் 2001ம் ஆண்டு வரை தனது ஆட்சிக்காலம் முழுவதும் வாச்சாத்தி வழக்கு விசார ணைக்கே வராமல் பார்த் துக் கொண்டதுதான் திமுக ஆட்சி என்று பெ.சண் முகம் விமர்சித்துள்ளார்.

தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் பெ. சண்முகம் வெள்ளியன்று வெளியிட் டுள்ள அறிக்கை வருமாறு:-

வாச்சாத்தியில் சகித்துக் கொள்ள முடியாத அந்தக் கொடுமை 1992ஆம் ஆண்டு ஜூன் மாதம் 20-ந் தேதி துவங்கி மூன்று நாட்கள் நடைபெற்றது. அன்றைய அதிமுக அரசு மொத்த சம்ப வத்தையும் மூடி மறைக்க முயற்சித்த நிலையில் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யும், தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கமும் தொடர்ந்து போராடி, கொடுமைகளை வெளிக்கொண்டு வந்தது மட்டுமல்லாமல் 19 ஆண்டு காலமாக வழக்கை தொடர்ந்து நடத்தி குற்றவாளிகளுக்கு தண்டனையும் பெற்றுத் தந்திருக்கிறது.

இந்த வழக்கில் திறம்பட செயல்பட்ட மத்திய புல னாய்வுத்துறை வழக்கறிஞர் ஜெயபாலன், சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் கள் வைகை, என்.ஜி.ஆர். பிரசாத், சம்கிராஜ், இளங் கோ ஆகியோருக்கும், போராட்டத்தில் முன் நின்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் நன்றியை தெரி வித்துக் கொள்கிறோம்.

வாச்சாத்தி வன்கொடு மையில் பாதிக்கப்பட்ட 18 பெண்களுக்கு ரூ. 15 ஆயிரம் வீதம் திமுக அறக்கட் டளை சார்பில் வழங்கப்படு வதாக திமுக தலைவர் கலை ஞர் அறிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட பெண்க ளுக்கு நீதிமன்றம் அறிவித் துள்ள நிவாரணம் போது மானதல்ல என்றும், உரிய நிவாரணம் பெற சட்டப் படியான நடவடிக்கை களை மேற்கொள்வோம் என்று நான் தெரிவித்த கருத்து - சட்டப்படி அரசு அளிக்க வேண்டிய நஷ்ட ஈடு பெற்றுத் தருவதும் தீர்ப்பு குறித்த எனது அபிப் பிராயமே தவிர, யாருக்கும் நான் கோரிக்கை வைக்க வில்லை என்பதை முதலில் தெளிவுபடுத்த விரும்புகி றேன். இந்த இடைப்பட்ட காலத்தில் 10 ஆண்டு காலம் திமுக ஆட்சிப் பொறுப் பில் இருந்திருக்கிறது. 1996ம் ஆண்டு தேர்தலின் போது, வாச்சாத்தியில் பாதிக்கப் பட்ட பெண்களுக்கு நீதி கிடைத்திட திமுகவுக்கு வாக்களியுங்கள் என்று நாளிதழ்களில் முழு பக்க விளம்பரம் வெளியிட்டது திமுக. ஆனால் ஆட்சிக்கு வந்ததற்கு பிறகு வாச் சாத்தியை மறந்து விட்டனர் என்பதே உண்மை.

இத்தகைய வழக்குகளில் விசாரணையை விரைவாக நடத்துவதற்கு தனி நீதிமன் றம் அமைக்க மாநில அர சுக்கு, தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்புச் சட்டம் அதிகாரமளிக்கி றது. திமுக ஆட்சியின் போது 1996ஆம் ஆண்டு அக்டோபர் 1ந் தேதி வாச் சாத்தி வழக்கை விசாரிப்ப தற்கென்று தனிநீதிமன்றம் அமைக்கக் கோரி உள்துறை செயலாளருக்கு, வழக்கின் மனுதாரர் என்ற முறையில் மனு அனுப்பினேன். பதிலே இல்லை. பிறகு, தமிழக அர சின் தலைமைச் செயலாள ரை நேரில் சந்தித்து இக்கோ ரிக்கையை வற்புறுத்தி னோம். 1996-2001 ஆட்சிக் காலம் முழுவதும் வாச் சாத்தி வழக்கு விசாரணைக்கே வராமல் பார்த்துக் கொண் டது திமுக ஆட்சி தான் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

பாதிக்கப்பட்ட மக்க ளுக்கு திமுக ஆட்சிக் காலத் தில் சட்டப்படி நிவாரணம் பெற பட்ட பாட்டை நாட றியும். 2002-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தாழ்த்தப் பட்டோர் மற்றும் பழங் குடியினர் வன்கொடுமை தடுப்புச் சட்ட அடிப்படை யில், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு ஆறு ஆண்டு காலம் ஆன பிறகும் நிவாரணத் தொகை வழங்க வில்லை என்று உயர்நீதிமன் றத்தில் ஒரு மனுவினை தமிழ்நாடு மலைவாழ் மக் கள் சங்கம் சார்பில் தாக்கல் செய்யப்பட்டது. ஒரு மாத காலத்திற்குள் நிவாரணம் வழங்க உயர்நீதிமன்றம் உத் தரவிட்டது. ஆனால் அதி முக ஆட்சிக் காலம் முழுவ தும் பல்வேறு துறைச் செய லாளர்களை கை காட்டி விட்டார்களே தவிர , நிவார ணம் வழங்கவில்லை. மீண் டும் 2006ம் ஆண்டு ஒரு மனு வினை தாக்கல் செய்தோம். அதில் 2007 ஏப்ரல் 13-ந் தேதி உயர்நீதிமன்றம் மிகக் கடு மையான உத்தரவினை பிறப் பித்தது. உத்தரவு வெளியி டப்பட்ட நாளிலிருந்து ஆறுவார காலத்திற்குள், யார் யாருக்கு எவ்வளவு தொகை, எந்தெந்த பிரிவில் வழங்கப்பட்டது என்ற விபரத்தை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டுமென தெளிவான உத்தரவினை வழங்கியது. ஆனால் ஆட் சிப் பொறுப்பில் இருந்த திமுக, அக்டோபர் இறுதி வரை நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த முன்வரவில் லை. அரசு செயலாளரை நேரில் சந்தித்து வற்புறுத்திய பிறகும் சாக்குப் போக்குத் தான் சொல்லிக் கொண்டி ருந்தார்கள். 2007 நவம்பர் மாதம் 5-ந் தேதி ஆயிரக் கணக்கானோர் கலந்து கொண்ட ஆர்ப்பாட்டம் தருமபுரி மாவட்ட ஆட் சியர் அலுவலகம் முன்பாக நடத்தப்பட்ட பிறகே, நிவா ரணம் வழங்குவதற்கான உத்தரவை திமுக அரசு வெளியிட்டது என்பதை பாதிக்கப்பட்ட மக்கள் அறி வார்கள். இந்த உண்மையை திமுக தலைமை மறைக்க முடியாது.

இந்த தீர்ப்பு, தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் நீண்ட நெடிய போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி என்பதை நாடறியும். இந்த நிலையில் தமிழக அரசு பாதிக்கப் பட்ட மக்களுக்கு வன்கொ டுமை தடுப்புச் சட்ட அடிப் படையில் உரிய நஷ்டஈடு வழங்குவதற்கு முன்வர வேண் டுமென கோரு கிறேன்.

-------------------------------------------------------------------------------------------------------------------



                                          உயிரை இழந்தோம் உணர்வை ?


பரமக்குடி தலித் மக்கள் மீது துப்பாக்கி சூடு
காவல்துறை மீது விழுந்த களங்கக் கோடு
மறியலுக்கு தண்டனை மரணமா ?
மனிதம் நீர்த்தது அதன் காரணமா?
மனித உயிர்கள் என்ன மலிவு விலை சூரணமா ?
அரசியல் பிழைத்தோர்க்கு அறமே
கூற்று என சிலப்பதிகாரம் உரைத்ததனை
 அதிகாரமதன் மீதில் அமர்ந்திடுவோர் உணர்வரோ ?
உணர்வை இழக்கா எங்கள் உழைப்பாளி வர்க்கத்தின்
பாடம்தனை பயில்வரோ ?