Saturday, October 29, 2011

வாழ்வுரிமைப் போரின் வீரம் மிக்க வரலாற்று நூல் வெளியீட்டு விழா


நூலை தென்மண்டல முன்னாள் துணைத்தலைவர் தோழர் E M  ஜோசப் வெளியிட மதுரை கோட்ட பென்சனர் சங்க செயலாளர் தோழர் ராஜகுணசேகர்  அவர்கள் பெற்றுக்கொண்டார்கள்                           

Wednesday, October 19, 2011

தோழர் N M சுந்தரம் அவர்களின் நூல் விமர்சனம்

நிதி மூலதனத்தின் கொடுங்கோன்மை

 அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் மூத்த தலைவர்
தோழர் என்.எம்.சுந்தரம்  எழுதிய புத்தகத்திற்கு மேற்கு வங்க மாநில 
முன்னாள் நிதியமைச்சர் தோழர் அசோக் மித்ரா எழுதிய விமர்சனத்தின்
தமிழாக்கம் கீழே  தரப்பட்டுள்ளது. அருமையான  ஒரு புத்தகத்திற்கு
அருமையான ஒரு ஆய்வு. 
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
நிதி மூலதனத்தின் கொடுங்கோன்மை
---- அசோக் மித்ரா 

இருபது ஆண்டு காலத்தில் உலக நிதி மூலதனத்தின் பங்கு : அதன் பேராசையும், தவறான கணிப்புகளுமே, பெருவீழ்ச்சி காலத்திற்குப் பின்னர் அமெரிக்காவை இவ்வளவு பெரிய பொருளாதார நெருக்கடிக்குத் தள்ளியது.

(இன்சூரன்ஸ் ஊழியர் இயக்கத்தின் மூத்த தலைவர் என்.எம். சுந்தரம் எழுதியிருக்கும் “தகர் நிலையில் உலக நிதி மூலதனம் - முகத்திரை கிழியும் சுதந்திரச் சந்தை முதலாளித்துவம்” (Fragility of Global Financial Capital) என்ற ஆங்கில நூல் குறித்து பொருளாதார நிபுணரும் மேற்குவங்க முன்னாள் நிதி அமைச்சருமான டாக்டர் அசோக் மித்ரா - தி `ஹிந்து நாளிதழ் - 11.10.11)

இந்நூலின் ஆசிரியர் ஒரு பொருளி யல் வல்லுனரோ அல்லது எந்தக் குறிப்பிட்ட துறை குறித்த நிதி ஆய் வாளரோ அல்ல. அவர் தொழிற்சங்க இயக்கத்தில் பழுத்த அனுபவம் கொண் டவர். இந்திய இன்சூரன்ஸ் துறையில், உலக நிதி மூலதனம் ஊடுருவியதை எதிர்த்த இன்சூரன்ஸ் ஊழியர்களின் கடுமையான போராட்டத்தினை தலை மை தாங்கி நடத்தியவர். அந்தப் போராட் டத்தில் முன்வைக்கப்பட்ட அனைத்து அம்சங்களிலும் முழுமையான வெற்றி கிடைக்கவில்லையெனினும், சர்வதேச நிதி மூலதனம் எவ்வாறு செயல்படுகிறது என்பது குறித்தும், அண்மைக் காலங் களில், அமெரிக்காவில் மட்டுமல்லாது, உலகின் பல கண்டங்களிலும் அது எத்த கைய மோசமான விளைவுகளை ஏற் படுத்தியிருக்கிறது என்பது குறித் தெல்லாம் நெருக்கமாக அறிந்து கொள்வ தற்கு அவருக்கு இந்த அனுபவம் உதவி யிருக்கிறது.

“இன்சூரன்ஸ் ஒர்க்கர்” மாத இதழில் தொடராக வெளிவந்த 27 கட்டுரைகள் இந்த நூலில் இடம் பெற்றுள்ளன. சில கருத்துக்கள் மீண்டும் மீண்டும் விவா திக்கப்பட்டிருக்கின்றன. தவிர, அருமை யான விவாதங்களுக்கு இணையாக, சில ஆழமான புள்ளி விவரங்களும் கூடு தலாக இடம்பெற்றிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.

சுந்தரத்தைப் பொறுத்தவரை அவரது தளராத நம்பிக்கைதான் அவரது பலம். நிதி மூலதனத்தின் தன்மை குறித்தும், அது ஒவ்வொரு நாட்டிலும், அதே போல் அந்நாடுகளில் ஒவ்வொரு துறையிலும் அது எப்படி கொள்ளைச் சுரண்டலில் ஈடுபட்டது என்பது குறித்த எதார்த்த நிலைமைகளை அவர் விரிவாகக் குறிப் பிட்டிருக்கிறார். கடந்த இருபது ஆண்டுக் கால அனுபவத்தை மட்டும் எடுத்துக் கொண்டால், சர்வதேச நிதி மூலதனம் என்பதற்கே நெருக்கடி என்பதுதான் மற்றொரு பெயராக இருக்க முடியும். அதனால் நெருக்கடியைத் தவிர வேறு ஒன்றையும் தோற்றுவிக்க முடியாது. ஏனெனில், அது அந்த வகையில் தான் கட்டமைக்கப்பட்டிருக்கிறது.

உடனடி லாபம், மேலும் லாபம், மென் மேலும் லாபம் என்பதே நிதி மூலதனத் தின் தொடரும் வேட்டை. இதற்காக, உலகம் முழுவதும் சுதந்திரமாகச் சுற்றி வருவதற்கான உலக அமைப்பினை அது தனது நீண்ட நெடிய முயற்சியின் மூலம் உருவாக்கியிருக்கிறது. உற்பத்தியில் ஈடுபடுவதை விட ஊகத்தில் ஈடுபடு வதன் மூலமே, அத்தகைய உடனடி கொள்ளை லாபம் சாத்தியமாகிறது. எனவே, ஊக நடவடிக்கைகள் அதனது இயல்பான விருப்பமாக மாறியிருக்கிறது.

பொருத்தமான சூழ்நிலைகள்!

அமெரிக்காவிலும், மேற்கு ஐரோப்பா விலுள்ள பணக்கார நாடுகளிலும் புதிய உயர் தொழில் நுட்பங்கள் காரணமாக, பிற நாடுகளை விட, முதலீடு - உற்பத்தி விகிதம் சாதகமாக மாறியுள்ளது. இந்த நாடுகளில் வருமான வினியோகத்தில் எந்த மாற்றமும் நிகழ்ந்து விடவில்லை. எனவே, ஒட்டுமொத்த கிராக்கி நிலைமை களிலும் ஸ்திரத்தன்மை உள்ளது. ஊக நடவடிக்கைகளுக்கு இது வெகுவாகப் பொருந்துகின்ற சூழ்நிலை என்பதால், அவை பன்மடங்கு அதிகரித்துள்ளன.

நிதி மூலதனத்திற்கு அறநெறிகள் என்றெல்லாம் ஒன்றும் கிடையாது. தனது லாபத்தினைப் பெருக்க வேண்டுமென் றால், அது எவ்வளவு மோசமானது என் றாலும், கிரிமினல் நடவடிக்கை என்றா லும் கூட அதில் ஈடுபடத் தயங்காது. எந்த அமெரிக்கப் பொருளாதாரம் தனக்கு மிகப் பெரும் பலமாக இருந்ததோ, அந்தப் பொருளாதாரத்தினையே இன்று பலவீனப்படுத்துவதில் நிதி மூலதனம் தயக்கம் காட்டவில்லை.

நிதி மூலதனத்தின் கொடுங்கோன் மை, மேற்கு ஐரோப்பாவில் மத்திய தரைக் கடல் ஓரங்களில் இருக்கும் சிறிய நாடுகளை வறுமைக்குள்ளாக்கும் நிலை மைக்கு சென்றிருக்கிறது. இந்தியப் பொரு ளாதாரத்தினை எப்படி வேண்டுமா னாலும் வடிவமைத்துக் கொள்ளலாம் என்ற அளவில், அது நிதி மூலதனத்தின் கைகளில் சிக்கித் தவிக்கிறது. பங்குச் சந்தையின் மீதான முழுமையான கட்டுப் பாடு அந்நிய நிதி முதலீட்டாளர்களின் கைகளில் உள்ளது. இந்திய நாடு உருவாக்கி வைத்திருக்கும் தொழில் உற்பத்தித் தளங்களை அழிப்பதற்குமான சக்தியும் இன்று அதனிடம் உள்ளது.

அதனுடைய அழிவு சக்தி ஒரு புறம் இருப்பினும் கூட, நாம் வேறு ஒரு அம்சத் தினை விவாதிக்க முடியும். நிதி மூலத னம் தகர்நிலையினை எட்டிவிட்டது என்பது உண்மையா? கடந்த இருபது ஆண்டு காலத்தில் உலக நிதி மூலதனத் தின் பேராசையும், தவறான கணிப்புக ளுமே, பெருவீழ்ச்சி காலத்திற்குப் பின் னர் அமெரிக்காவை இவ்வளவு பெரிய பொருளாதார நெருக்கடிக்குத் தள்ளி யிருக்கிறது.

1930களில், அமெரிக்க ஜனாதிபதி பிராங்க்ளின் ரூஸ்வெல்ட், அரசாங்கத் தின் பொதுப்பணிகளின் மூலம் வரு மானத்தையும், வேலைவாய்ப்புக்களை யும் உருவாக்கினார். பற்றாக்குறை பட் ஜெட் (னுநகiஉவை குiயேnஉiபே) மூலம் நிதி நிலைமையினைச் சமாளித்தார்.

அரசியல் செல்வாக்கு!

இன்றைய அமெரிக்காவில் நிதி மூல தனத்தின் அரசியல் செல்வாக்கு, இதற்கு நேர்மாறாக செயல்பட்டிருக்கிறது. பாரக் ஒபாமாவும் பற்றாக்குறை பட்ஜெட்டிற்கு நிர்ப்பந்திக்கப்பட்டார். ஆனால் மக்களுக் காக அல்ல. திவாலாகும் நிலையிலிருந்த வங்கிகளையும், பெரிய கம்பெனிகளையும் காப்பாற்றுவதற்கான நிர்ப்பந்தம் அது. அவர்களது சொந்தத் தவறுகளின் காரணமாக ஏற்பட்ட நிலைமைகளி லிருந்து அவர்களைக் காப்பாற்றுவதற் காக செலவழிக்கப்பட்ட பணம் அது. உலக நிதியங்களுக்கு தலைமை தாங்கிய, கம்பெனி தலைவர்களின் போனஸ் உட்பட அனைத்தும் பாதுகாக்கப்பட்டது.

பொருளாதார மீட்சிக்காக அரசாங்கம் ஒதுக்கிய பணத்தின் ஆகப் பெரும்பகுதி, பெரிய பெரிய கம்பெனிகளின் நலன்களுக் காகவே செலவிடப்பட்டதே தவிர, நடுத் தர வர்க்கம் மற்றும் தொழிலாளி வர்க்கத் தினரின் வாழ்நிலைத் துயரங்களைப் போக்குவதற்கு செலவிடப்படவில்லை.

தேசியப் பொருளாதாரங்கள் பலவற் றை அழித்த பின்னரும் கூட நிதி மூல தனம் ஒரு அச்சுறுத்தும் சக்தியாகவே தொடர்ந்து வருகிறது. அதன் அளவு கடந்த பேராசை அமெரிக்காவில் உற் பத்தி தேக்கத்தினை உருவாக்குமா, அதை விட மோசமான நிலைமைகளை உருவாக்குமா? மேற்கு ஐரோப்பாவில், சமூக நிலைமைகளை புரட்டிப் போடுமா? என்ன நடக்கும் என்பது யாருக்கும் தெரியாது. வியத்தகு வகையில் பலவும் நடக்கக் கூடும். அமெரிக்கப் பொருளாதாரம் நம்பகத்தன்மையினை இழக்குமானால், டாலர் உலகின் ரிசர்வ் நாணயம் என்ற அந்தஸ்தினை இழந்து விடும். அதுவே, நிதி மூலதனத்தின் இறுதி யாத்திரைப் பாடலாக அமையலாம்.

மற்றுமொரு காரணியும் இங்கு கவனத் தில் கொள்ளப்படவேண்டும். நிதி மூலத னத்தினை எதிர்கொள்ளும் சக்தியாக ஏதும் இல்லாததும் நிதி மூலதனத்தின் ஆதிக்கம் தொடர்வதற்குக் காரணமாய் இருக்கிறது.

உலகின் அடிவானத்தைத் தொட்டுப் பார்த்தால், இன்னும் 20 ஆண்டுகளில், சீனா பெரிய அளவில் பொருளாதார மற்றும் இராணுவ பலத்துடன் நிதிமூல தனத்தினை எதிர்கொள்ளும் சக்தியாக உருவாகும் சாத்தியங்கள் உள்ளன. ஆனால் ஒரு நிபந்தனை. ஏற்றுமதியினை பெரிதும் நம்பி நிற்கும் பொருளாதாரம் என்ற நிலைமையிலிருந்து அது விடுபட வேண்டும்.

சுந்தரத்தினுடைய புத்தகம் அவை குறித்த சிந்தனைகளை முன்வைக்கிறது. அவை அனைத்தும் வரவேற்கப்பட வேண்டியவையே.

தமிழில் : இ.எம். ஜோசப்

நன்றி : தி ‘ஹிந்து நாளிதழ் - 11.10.11


தமிழாக்கம் வெளியீடு  தீக்கதிர் 

Saturday, October 1, 2011

ஓய்வறியா தலைவருக்கு எல். ஐ. சி பணிநிறைவு பாராட்டு

தோழர்  வேணுகோபால் அவர்களின் பணிநிறைவு நிகழ்ச்சியில் சில...




                    அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் தோழர்  K.வேணுகோபால் அவர்கள் செப் 30 , 2011 அன்று தனது 41 ஆண்டு கால எல் ஐ சி  பணியினை நிறைவு செய்கிறார் .
                      எல் ஐ சி  பணியில் சேர்ந்து தனது தொழிற்சங்க பணியினை துவக்கிய தோழர் வேணுகோபால் மண்டல, அகில இந்திய பொறுப்புகளில் திறம்பட பணியாற்றினார் . 11 ஆண்டு கால அகில இந்திய பொறுப்புகளை AIIEA வின் பாரம்பரியத்திற்கேற்ப பல்வேறு பரிமாணங்களில் பகலவனை போல ஓய்வின்றி பன்முகத்தன்மை கொண்ட மகத்தான தலைவராய் பணியாற்றிய தோழர் வேணுகோபால்  2004 ஆம் ஆண்டு சுனாமி 2005 ஆம் ஆண்டு காஷ்மீர் பூகம்ப நிவாரண பணிகளில் ஊழியர்களை செயல்பட செய்து தானும் நேரடியாக சென்று தனது அதரவுக்கரங்களை நீட்டியவர் . கோட்டசங்க மாநாடு தென்மண்டல மாநாடு என பல்வேறு மாநாடுகளிலும் இந்தியா முழுமையும் சுற்றிச்சுற்றி சோர்வறியாது பணியாற்றிய தலைவர்  இன்று தனது LIC பணியினை நிறைவு செய்கிறார் அலுவலக பணியில் மட்டுமே ஒய்வு.

"நாட்டிற் குழைத்தல்,' இமைபொழுதுஞ் சோராதிருத்தல்"

"வெற்றியே யன்றி வேறேதும்  பெருகிலோம்"

"நாட்டினைத் துயரின்றி நன் கமைத்திடுவதும்
உளமெனு நாட்டையொரு பிழையின்றி ஆள்வதும்"

என்ற மகாகவி பாரதியின் வரிகளை மனதில் ஏந்தி பணியாற்றிகொண்டிருக்கும்    மகத்தான தலைவருக்கு தொழிற்சங்க பணியில் என்றுமே ஓய்வில்லை