மாற்று அவசியம்... மாற்றம் நிச்சயம்
பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பு கடந்த 20 ஆண்டுகளில் இந்தியாவில் ஏழை மற்றும் பணக்காரர்களுக்கு மத்தியிலான ஏற்றத்தாழ்வு
இருமடங்காக உயர்ந்திருப்பதாக அறிக்கை வெளியிட்டுள்ளது. மோடி தனது தேர்தல்
பிரச்சாரங்களில் கறுப்புப் பணத்தை வெளிக்கொணர்வது பற்றி நியை பேசிகிறார்;
1948லிருந்து 2008ம் ஆண்டு வரை வாஜ்பாய் பிரதமராக இருந்த “ஒளிரும் இந்தியா”
உட்பட 462 பில்லியன் டாலர் (சுமார் 25லட்சம் கோடி ரூபாய்)
இந்தியாவிலிருந்து கணக்கில் வராத கறுப்புப் பணமாக வெளியேறியுள்ளதாக “உலக
நிதிநேர்மை” (ழுடடியெட குiயேnஉடைய iவேநபசயடவைல) என்ற அமைப்பு
அறிவித்திருக்கிறது. மோடி வசதியாக இதை மறந்துவிடுகிறார்.இந்திய நாட்டின்
மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10சதவீதம் 55 கோடீஸ்வரர்களிடம் உள்ளது என்பதை
ராகுலும் அறிவார், மோடியும் அறிவார்.
இந்த கோடீஸ்வரர்கள் அரசு அதிகாரத்தில் உயரிய இடத்தில் உள்ளனர்.
அம்பானியுடன் மோதி மணிசங்கர ஐயரும், ஜெய்பால் ரெட்டியும் பந்தாடப்பட்டனர்.
வீரப்பமொய்லி கொஞ்சம் அனுசரித்துப் போவதாக செய்திகள் உண்டு. குமாரமங்கலம்
பிர்லா மீது வழக்குப்பதிவு என்றவுடன் காங்கிரஸ் கட்சியின் ஆனந்த் சர்மாவைப்
போல் பாஜகவின் அருண்ஜெட்லியும் துடித்துப் போனார். இது வர்க்கப்
பாசம்தான்.எவ்விதமான உரிமைகளுமின்றி, அதிகாரங்களுமின்றி இந்தியாவில் 77
சதவிகித மக்கள் ரூ.20க்கும் கீழே வருமானம் பெற்று வாழ்கின்றனர். நுகர்வு
அடிப்படையில் ஏற்றத்தாழ்வினை வெளிக்கொணரும் விவரங்களை ஊடகங்கள்
வெளியிட்டுள்ளன. அதன்படி 2000ம் ஆண்டில் நகர்ப்புறத்தில் பணக்காரர்களின்
நுகர்வு ஏழைகளின் நுகர்வை காட்டிலும் 12 மடங்கு அதிகமாக இருந்தது. 2012ல்
இது 15 மடங்காக உயர்ந்துள்ளது. கிராமப்புறங்களில் இதே காலகட்டத்தில் 7
மடங்காக இருந்தது. 9 மடங்காக உயர்ந்துள்ளது.
அந்த 12 ஆண்டுகளில் புதிய தாராளமய செயல்பாட்டில் ஏற்றத்தாழ்வு இடைவெளி விரிவடைந்ததே தவிர குறையவில்லை.மோடியின் தேநீர் கடை வீடியோ முகமும், ராகுலின் ரயில்வே சுமை கூலிகள் சந்திப்பும், இந்த ஏற்றத்தாழ்வுகளைப் பற்றி இவர்கள் கவலைப்பட்டதாக காண்பிக்கவில்லை. மாறாக இருவருமே பெர்னார்ட்ஷா கூறிய வண்ண வண்ண பலூன்களைப் பறக்கவிட்டுக் கொண்டிருக்கிறார்கள். நமது சிந்தனை களவாடப் படாமல் விழிப்புடன் இருந்து செயல்பட வேண்டும். தேர்தல் களத்தில் தெளிவுடன் செயல்பட வேண்டிய தேவை உள்ளது.
“மாற்று அவசியம். மாற்றம் நிச்சயம்” என்ற காப்பீட்டுக்கழக ஊழியர் சங்க தஞ்சை கோட்ட வெளியீட்டில் தோழர் ஆர்.கோவிந்தராஜன் எழுதியதிலிருந்து....