இன்சூரன்ஸ் ஊழியர்களின் மாபெரும் மனிதச்சங்கிலி இயக்கம்
இன்சூரன்ஸ் துறையில் அந்நிய நேரடி மூலதன உயர்வை கொண்டு வரும் மத்திய அரசின் இன்சூரன்ஸ் மசோதாவை கண்டித்து சிவகங்கையில் இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் சார்பில் மாபெரும் மனிதச் சங்கிலி இயக்கம் நடைபெற்றது .மனிதச் சங்கிலி இயக்கத்தை இந்தியாவிற்கான மக்கள் இயக்க சிவகங்கை கிளை தலைவர் தேசிய நல்லாசிரியர் திரு.M கண்ணப்பன் அவர்கள் துவக்கி வைத்து உரையாற்றினார் . நிகழ்வில் சிவகங்கை நகர் மன்ற தலைவர் திரு
M .அர்ச்சுனன்,CITU நிர்வாகிகள் தோழர் M கந்தசாமி ,R வீரையா ,அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் தோழர் மெய்யப்பன் , ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி தோழர்கள்,வங்கி மற்றும் தொலைதொடர்பு ஊழியர் சங்க நிர்வாகிகள்,தமிழ் நாடு அரசு ஒய்வுஊதியர்கள் , LIC ஊழியர்கள் ,முகவர்கள் ,வளர்ச்சி அதிகாரிகள் ,முதல் நிலை அதிகாரிகள் என அணைத்து தொழிற்சங்கங்களின் சார்பில் 250க்கும் மேற்பட்டவர்கள் திரளாக பங்கேற்றனர் நிகழ்ச்சிக்கு சிவகங்கை கிளை செயலாளர் தோழர் M கர்ணன் தலைமைவகித்தார் கோரிக்கைகளை விளக்கி மதுரை கோட்ட துணை பொருளாளர் தோழர் S தனிகைராஜ் விளக்க உரையாற்றினார் சிவகங்கை கிளை பொறுப்பாளர் தோழர் B .பாரதி தாசன் அவர்கள் நன்றியுரை வழங்கினர் .

No comments:
Post a Comment
Please do not write junk comments; hate-messages; spoil words. Thank you.