Saturday, December 7, 2013

தாராளமயக் கொள்கையால் அனைத்து தரப்பு மக்களும் பாதிப்பு: டி.கே.ரங்கராஜன்  எம்.பி.பேச்சுதென் மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பு மாநில சிறப்பு மாநாட்டில் பேசுகிறார் மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.ரங்கராஜன். உடன், காப்பீட்டுக் கழக நிர்வாகிகள் (இடமிருந்து) ஜி.ஆனந்த், புண்ணியமூர்த்தி, க.சுவாமிநாதன், சட்டப்பேரவை உறுப்பினர் ஆர்.அண்ணாதுரை.

மத்திய அரசு பின்பற்றி வரும் தாராளமயக் கொள்கையால் அனைத்து தரப்பு மக்களும் பாதிப்படைந்துள்ளனர் என மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் கூறினார்.
தென் மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பு, தென் மண்டல பொது இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் சார்பில் மதுரையில் தமிழ்நாடு தொழில், வர்த்தக சபை அரங்கில் சனிக்கிழமை நடைபெற்ற மாநில சிறப்பு மாநாட்டில் அவர் பேசியது:
இன்சூரன்ஸ் துறையில் அந்நிய நேரடி முதலீட்டை 26 சதத்திலிருந்து 49 சதமாக உயர்த்துவது, பொது இன்சூரன்ஸ் நிறுவனங்களின் பங்குகளை விற்பது என்பதில் காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு தீவிரமாக இருக்கிறது. இதற்கு பாஜக முழுமையாக ஆதரவு தருகிறது. நடப்பு நாடாளுமன்றக் கூட்டத் தொடர் முடிய இன்னும் குறுகிய நாள்களே உள்ளன. நான்கு மாநில பேரவைத் தேர்தல் முடிவுகள், கருத்துக் கணிப்பின்படி இருந்தால், இன்சூரன்ஸ் மசோதாவை பாஜக நிறைவேற்ற விடாது. ஆகவே, இன்சூரன்ஸ் மசோதா நிறைவேறாது என்பதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன.
இந்த மசோதாவை கடுமையாக எதிர்த்து வருகிறேன். அதற்கு காரணம் நாடு முழுவதும் இன்சூரன்ஸ் ஊழியர்கள் நடத்திய போராட்டம்தான். அன்றைய சூழலில் இடதுசாரிகளுக்கு மக்களவையில் 64 உறுப்பினர்களும், மாநிலங்களவையில் 17 உறுப்பினர்களும் இருந்தனர்.
இதனால் இன்சூரன்ஸ் மசோதாவை காங்கிரஸ் அரசால் நிறைவேற்ற முடியவில்லை. இன்றைய சூழலில் அத்தகைய பலம் இல்லை, இதனால் மசோதா கொண்டு வரப்பட்டால் அதை எதிர்த்து வாக்களிக்க மட்டுமே முடியும்.
மத்திய அரசு பின்பற்றிவரும் தாராளமயக் கொள்கைகளால் சமூகத்தின் அனைத்துத் தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். சிறு, நடுத்தர, உற்பத்தியாளர்களுக்கு மின்வெட்டு, கடனுக்கான வட்டி அதிகரிப்பு ஆகியன மட்டுமே பாதிப்பு அல்ல. புதிய பொருளாதாரக் கொள்கைகளும் அதிலிருக்கும் நிபந்தனைகளும் சிறு உற்பத்தியாளர்களைக் கடுமையாகப் பாதிக்கிறது. இன்சூரன்ஸ் மசோதா நிறைவேற்றப்பட்டால் அது தொழிலாளர்கள், சிறு உற்பத்தியாளர்கள், விவசாயிகள் என அனைத்துத் தரப்பினரையும் பாதிக்கும். ஆகவேதான், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இதைக் கடுமையாக எதிர்க்கிறது.
இன்சூரன்ஸ் துறையைப் பாதுகாப்பது என்பது, மக்களின் சேமிப்பைப் பாதுகாப்பது மட்டுமல்ல. கடந்த 60 ஆண்டு காலமாக இத் துறையில் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள் பெற்றுவந்த இட ஒதுக்கீட்டைப் பாதுகாப்பதும் கூட. அடிப்படை வசதிகளுக்காகப் போராடும் பொதுமக்கள், அவர்களது சேமிப்புக்கு ஆதாரமாக இருக்கும் இன்சூரன்ஸ் துறையில் அந்நிய நேரடி முதலீடு அதிகரிப்பதை எதிர்த்துப் போராடவில்லை. காரணம், இதன் பாதிப்பு என்ன என்பது அவர்களுக்குச் சென்று சேரவில்லை. அதைச் செய்வதற்கான நடவடிக்கைகளை இன்சூரன்ஸ் ஊழியர்கள் மேற்கொள்ள வேண்டும் என்றார். மதுரை தெற்கு சட்டப்பேரவை உறுப்பினர் ஆர்.அண்ணாதுரை, தென் மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பு, பொதுச் செயலர் க.சுவாமிநாதன், துணைத் தலைவர் ஆர்.புண்ணியமூர்த்தி, தென் மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் சங்க பொதுச் செயலர் ஜி.ஆனந்த் உள்ளிட்டோர் பேசினர்.
நான்கு பொதுத் துறை இன்சூரன்ஸ் நிறுவனங்களை இணைப்பது, இன்சூரன்ஸில் அந்நிய நேரடி முதலீட்டை உயர்த்தக் கூடாது, பொது இன்சூரன்ஸ் பங்குகளை விற்கக் கூடாது என்பதை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
                                                                                 

 சிறப்பு மாநாட்டிற்கு தென்மண்டல துணைத்தலைவர் தோழர் R.புண்ணிய மூர்த்தி தலைமை ஏற்க மதுரை கோட்ட சங்க பொதுச்செயலாளர் தோழர் N .சுரேஷ்குமார் வரவேற்புரை நிகழ்த்த பொது இன்சூரன்ஸ் ஊழியர் சங்க தென் மண்டல பொறுப்பாளர் தோழர் ஆனந்த் துவக்கி வைத்து உரை நிகழ்த்தினார் மாநாட்டினை வாழ்த்தி CPM மாநிலங்களவை உறுப்பினர் தோழர் T.K.ரங்கராஜன் ,மதுரை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் தோழர் இரா.அண்ணாதுரை மற்றும் எல்.ஐ.சி தேசிய களப்பணியாளர் கூட்டமைப்பின் மதுரை கோட்ட தலைவர்  தோழர் ஆபேத் மனோகர் தேவாரம் ,லிகாய் தென்மண்டல பொதுசெயலாளர் தோழர் M.செல்வராஜ்       எல்.ஐ.சி ஒய்வு பெற்றோர்  சங்கத்தின் பொதுச்செயலாளர் தோழர் C.சந்திர சேகரன் (பாரதி)  முதல்நிலை அதிகாரிகள் சங்க தலைவர் N.மனோகரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர் . மாநாட்டினை நிறைவு செய்து தென் மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் தோழர் க.சுவாமிநாதன் கருத்துரை வழங்கினார் .பொது இன்சூரன்ஸ் மதுரை மண்டல செயலாளர் தோழர் புஷ்பராஜ் நன்றியுரை வழங்கினார் 

No comments:

Post a Comment

Please do not write junk comments; hate-messages; spoil words. Thank you.