Thursday, December 13, 2012






இன்சூரன்ஸ் ஊழியர்களின் இலட்சம் துண்டு பிரசுரம் வழங்கும் இயக்கம் 

            இன்சூரன்ஸ் துறையில் அன்னிய நேரடி முதலீட்டு  உயர்வை  
கைவிடக்கோரி இன்சூரன்ஸ் ஊழியர்கள் மதுரை கோட்டம் முழுமையும்  இலட்சம் துண்டு பிரசுரங்களை வழங்கும் இயக்கத்தை 12.12.12 அன்று ஒரே  நாளில் 26 கிளை மையங்களில் நடத்தினர் . அதன் ஒரு பகுதியாக சிவகங்கை கிளை சங்கம் சார்பில் சிவகங்கை வார சந்தை பகுதியில் மக்களை சந்தித்து துண்டு பிரசுரம் வழங்கும் இயக்கம் நடைபெற்றது .நிகழ்ச்சியினை  தலைமை ஏற்று சிவகங்கை கிளை தலைவர் தோழர் செல்லபாண்டிநடத்தினார் .நிகழ்ச்சியில் மதுரை கோட்ட சங்க துணை பொருளாளர் தோழர் தனிகைராஜ் சிவகங்கை CITU மாவட்ட தொழிற்சங்க நிர்வாகி தோழர் கந்தசாமி ,வழககறிஞர் தோழர் மதி , ஒய்வு பெற்ற அரசு ஊழியர் 
தோழர்  நல்லையா ,இன்சூரன்ஸ் சிவகங்கை கிளை ஊழியர்கள் மற்றும் முகவர்கள்  திரளாக பங்கேற்றனர் .

No comments:

Post a Comment

Please do not write junk comments; hate-messages; spoil words. Thank you.