Wednesday, November 23, 2011

பரந்து விரிந்த ஆர்பாட்டத்தின் பத்திரிக்கை செய்திகள்


 


தினமலர் முதல் பக்கம் » பொது செய்தி »தமிழ்நாடு

எல்.ஐ.சி.சட்ட திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு நெல்லை, பாளை., யில் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
.திருநெல்வேலி : எல்.ஐ.சி.சட்ட திருத்த மசோதாவை எதிர்த்து பாளை., நெல்லை டவுன் எல்.ஐ.சி.அலுவலகம் முன்பு ஊழியர்கள், அதிகாரிகள், வளர்ச்சி அதிகாரிகள், முகவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். எல்.ஐ.சி.சட்ட திருத்த மசோதா பார்லிமென்டில் தாக்கல் செய்யப்படவுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், விலைவாசி உயர்வு, பொதுத்துறை பங்கு விற்பனைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் எல்.ஐ.சி.கோட்ட அலுவலகம், நெல்லை எல்.ஐ.சி.அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. பாளை., கோட்ட அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு கோட்ட பொதுச் செயலாளர் முத்துக்குமாரசாமி தலைமை வகித்தார். சங்கத்தலைவர் மதுபால், முத்தையா முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் திரளான ஊழியர்கள், முகவர்கள், அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


Call to scrap amendment bills  (THE HINDU)

Staff Reporter
Share  ·   print   ·   T+  
Members of Insurance Corporation Employees' Union staging a demonstration in Madurai on Tuesday. Photo: R. Ashok
Members of Insurance Corporation Employees' Union staging a demonstration in Madurai on Tuesday. Photo: R. Ashok
Members of the Insurance Corporation Employees' Union (ICEU), Madurai division, staged a lunch-hour demonstration here on Tuesday urging the Central government scrap the LIC and Insurance Law Amendment bills
Answering a call given by the All India Insurance Employees Association (AIIEA) in view of winter session of Parliament commencing on Tuesday, the protestors raised slogans pressing various demands.
According to the ICEU's general secretary-Madurai division, N. Suresh Kumar, the LIC Amendment bill was a possible precursor to privatisation as it empowered the government to revoke its sovereign guarantee given to Life Insurance Corporation (LIC) of India. This was a long standing demand of private insurance companies and would benefit only them and not the people.
Also, the bill empowered the government to raise its capital to Rs. 100 crore from the present Rs. 5 crore. The government could, at a later date, approach the stock markets and sell its shares. Also, the bill mandated the LIC to reduce bonus given to policy holders from the present 95 per cent of the company's surplus to 90 per cent.
Even though a Parliamentary Standing Committee had recommended against revoking the sovereign guarantee or reducing the bonus given to policy holders, the Centre seems intent on tabling the Bill in this session and proceeding with the proposed measures, he said.
The Insurance Law Amendment Bill would allow increasing the cap on foreign direct investment in insurance sector to 49 per cent from 26 per cent. Also, it would allow public sector general insurance companies to approach the stock markets to raise capital, which could also lead to possible privatisation, he said.
Mr. Suresh Kumar said that if the government failed to listen to the unions, they would have no choice but to escalate their protests.

LIC employees stage agitation

Special Correspondent
Share  ·   print   ·   T+  
act for acts: LIC employees staging a protest in Thanjavur on Tuesday.
act for acts: LIC employees staging a protest in Thanjavur on Tuesday.
Employees of the divisional office of the Life Insurance Corporation of India (LIC) staged a demonstration here on Tuesday in front of the office demanding that the Central government do not pass two acts related to insurance sector which they alleged ‘will affect the welfare of policy holders and agents'.
R.Punniyamurthy, Thanjavur district president of the All India Insurance Employees Association, led the agitation. Raja of Agents Association and S.Selvaraj of the officers association participated in the demonstration.
Later Mr.Punniyamurthy told presspersons that it has been planned by the Central government to introduce 31 Bills during this winter session of Parliament that began on Tuesday. Out of them two are related to the insurance sector. In one Act, 95 per cent bonus given to policy holders has been reduced to 90 per cent. Another act paves way for increasing the foreign investment in insurance sector in the country to 41 per cent from 26 per cent. Saying that if these Bills are passed, the LIC employees throughout the country will go on a one-day strike. Mr.Punniyamurthy added that insurance sector employees staged demonstrations in support of their demands throughout the country on Tuesday. In Thanjavur district, demonstrations were held in all the 27 branch offices besides the divisional office at Thanjavur. 
 

Insurance employees see red in move to introduce amendment Bills

Special Correspondent
Share  ·   print   ·   T+  
Members of the Insurance Corporation Employees' Union staged a demonstration here on Tuesday to protest against the move to introduce the LIC Amendment Bill and the Insurance Amendment Bill in Parliament.
Joint secretary of the union (Vellore division) D. Manavalan criticised the United Progressive Alliance Government for not taking into consideration the recommendation of the Standing Committee of the Finance Ministry not to go ahead with the LIC Amendment Bill as it would be detrimental to the interest of policy-holders and ruin the economy.
Opposing the Bill, the All India Insurance Employees' Association had collected over 17 lakh signatures and sent it to Prime Minister Manmohan Singh. Mr. Manavalan said that when the insurance industry all over the world is struggling for survival and private insurance companies are facing closure and bankruptcy, the LIC is not only performing well but also on an expansion mode.
The UPA government seemed to be keen on destabilising the nationalised insurance industry and this is not acceptable, he said. Secretary K.P. Sugumaran said if the government did not heed the demand, insurance employees would go on a nationwide strike.

Tuesday, November 22, 2011

இந்தியா முழுமையும் நடைபெற்ற இன்சூரன்ஸ் ஊழியர்களின் எழுச்சி மிகு ஆர்ப்பாட்டம்

குளிர்கால கூட்ட தொடர் துவக்க நாள் நவம்பர் 22 அன்று இன்சூரன்ஸ் அலுவலகங்களின் முன்பு 

இன்சூரன்ஸ் சட்ட திருத்த மசோதாவை கைவிடு , 
எல் .  . சி சட்ட திருத்த  மசோதாவை கைவிடு,
 பென்சன் துறையை பங்குச்சந்தை வர்த்தகத்தில் ஈடுபடுத்ததே  
என்ற முழக்கங்களோடு
இந்தியா முழுமையும் இன்சூரன்ஸ் ஊழியர்களின் எழுச்சி மிகு மதிய நேர உணவு இடைவேளை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது அதன் ஒரு பகுதியாக சிவகங்கை LIC அலுவலகம் முன்பாக நடை பெற்ற ஆர்பாட்டத்தில் முகவர்கள், வளர்ச்சி அதிகாரிகள் முதல்நிலை அதிகாரிகள் ஊழியர்கள் திரளாக பங்கேற்ற நிகழ்ச்சி .



Saturday, November 19, 2011

மாணவர்களுக்கான மாதிரி தேர்வு மற்றும் பயிற்சி முகாம் நிறைவு நிகழ்ச்சி



இந்தியாவிற்கான மக்கள் இயக்கம் சிவகங்கை கிளை சார்பாக வங்கி பணியிடங்களுக்கான இலவச மாதிரி தேர்வு மற்றும் பயிற்சி முகாம் நிறைவு நிகழ்ச்சி சிவகங்கை மன்னர் மேல்நிலை பள்ளியில் நடைபெற்றது . நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக சிவகங்கை நகர் மன்ற தலைவர் திரு M.அர்ச்சுனன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரை நிகழ்த்தினர். நிகழ்ச்சியினை தலைமை ஏற்று இந்தியாவிற்கான மக்கள் இயக்க சிவகங்கை கிளை  தலைவர் திரு.S.கண்ணப்பன் அவர்கள் நடத்தினர் மன்னர் கல்வி நிறுவன செயலாளர் திரு V .S . குமரகுரு அவர்கள் முன்னிலை வகித்தார். இன்சூரன்ஸ் ஊழியர் சங்க மதுரை கோட்ட செயலாளர் திரு N.சுரேஷ்குமார் அவர்கள் வாழ்த்துரை வழங்கினர்  நன்றி உரையினை DR .அம்பேத்கர் கல்வி வேலை வாய்ப்பு மைய சிவகங்கை ஒருங்கிணைப்பாளர்  திரு B.பாரதிதாசன் அவர்கள் வழங்கினர்.
வாழ்த்துரையில் திரு அர்ச்சுனன் அவர்கள் சிவகங்கை மாவட்டத்தில் 1989 க்கு பிறகு I .A .S  பணிக்கு யாரும் தேர்வாகாத நிலை உள்ளது எனவே இது போன்ற பயிற்சி மையங்களை தொடர்ச்சியாக நடத்திட அணைத்து வசதிகளுடன் கூடிய பயிற்சி மையம் ஒன்றினை சிவகங்கை நகரில் ஏற்படுத்திட சிவகங்கை நகராட்சி அணைத்து முயற்சிகளையும் எடுக்கும் என உறுதி கூறினார். நிகழ்ச்சியில் 50க்கும் மேற்பட்ட  மாணவர்கள் கலந்து கொண்டு தேர்வு எழுதினர். 


Wednesday, November 16, 2011

சிதம்பரத்தில் சுடராய் ஒளிரும் சுடர் கலைக்குழு

வேலூர் கோட்டச்சங்க மாநாடு அக்டோபர் 30 அன்று சிதம்பரம் நகரில் நடைபெற்றது. மாலை நடைபெற்ற மக்கள் ஒற்றுமை கலை மாலை நிகழ்வில் மதுரை கோட்டச்சங்க சுடர் கலை குழுவினரின் தப்பாட்டமும் , நாடகமும் நடைபெற்றது . அந்நிகழ்ச்சியில் சில துளிகள் ...

 







Tuesday, November 15, 2011

தள்ளாடும் தனியார் துறை தாங்கிப்பிடிக்க முனையும் கை கள்

     
பெரு முதலாளிகளில் ஆடம்பரம் மற்றும் வீண் செலவுகளுக்கு அடையாளம் காட்ட வேண்டுமென்றால் எளிதில் நினைவுக்கு வருபவர் மதுபான விற்பனையில் ஈடுபட்டிருக்கும் விஜய் மல்லையாதான். அவரது இந்த நடவடிக்கைகள் அனைத்தும் மக்களைக் கவருபவையாக ஊடகங்களால் சித்தரிக்கப்பட்டன. வெறும் காலண்டர் தயாரிக்க ஏராளமான மாடல்களை அழைத்துக் கொண்டு, தனி விமானத்தில் உலகமெங்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்டார் மல்லையா. அந்த செலவெல்லாம் புதுமையான உத்தியாகக் காட்டப்பட்ட மக்கள் மூளைச் சலவைக்கு உள்ளாகினர். கிங் ஃபிஷர் விமான நிறுவனம் வந்தபோது தனியார் துறைக்கு எடுத்துக்காட்டாக அதை சித்தரித்து வந்தனர். 

இவையனைத்தும் வெகு விரைவிலேயே அம்பலமாகிவிட்டன. 2003 ஆம் ஆண்டில் துவக்கப்பட்ட கிங் ஃபிஷர் நிறுவனம், ஒரு ஆண்டில்கூட லாபத்தில் இயங்கவில்லை. அந்நிறுவனத்தின் ஒட்டுமொத்த இழப்பு எட்டாயிரம் கோடி ரூபாயைத் தாண்டி நிற்கிறது. அவரது சொத்துக்கள் என்று பார்த்தால் ஆடம்பரக் கார்கள், பந்தயக்குதிரைகள், பழங்கால வாட்கள், ஐ.பி.எல். கிரிக்கெட் மற்றும் ஃபார்முலா-1 அணி என்றுதான் பட்டியல் இருக்கிறது. மக்களின் பணத்தை ஆடம்பரமாக வாரிக் கொட்டியிருக்கிறார். தாங்க முடியாத கடன் என்றவுடன்தான் இது அம்பலமாகியிருக்கிறது. அனைத்துக் கடன்களையும் தீர்க்க அரசு உதவ வேண்டும் என்று கோரியிருக்கிறார். இந்தக் கோரிக்கையை ஏற்கக்கூடாது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. மக்கள் பணத்தில் இந்தப் பணி நடக்கக்கூடாது என்று கட்சியின் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத் கருத்து தெரிவித்துள்ளார். 

விஜய் மல்லையா தலைமையிலான குழுமத்தில் ஆறு நிறுவனங்கள் உள்ளன. இவற்றின் பங்குகள் விலையும் கடுமையாகச் சரிந்துள்ளது. அதைத் தூக்கி நிறுத்தவே, நோய் வாய்ப்பட்டிருக்கும் விமானப் போக்குவரத்துத்துறைக்கு உதவுவோம் என்று பிரதமர் மன்மோகன்சிங் கருத்து தெரிவித்தார். அதேவேளையில்தான், பெட்ரோல் விலை மீண்டும் உயரும் என்று அபாயச்சங்கு ஊதியுள்ளார். கிங் ஃபிஷர் நிறுவனத்திற்கு உதவக்கூடாது என்று பஜாஜ் குழுமத்தின் தலைவர் ராகுல் பஜாஜ் கருத்து கூறியுள்ளார். இவருடைய குழுமம் வங்கிகளிடமிருந்து வாங்கிய கடன்கள் திருப்பித் தரப்படாதது பற்றி இவர் இன்னும் வாய் திறக்கவில்லை என்பது தனிக்கதையாகும்.

நடப்பு நிதியாண்டுத் துவக்கத்தில்தான் தனது கடன் சுமையை நிதி நிறுவனங்கள் மீது கிங் ஃபிஷர் ஓரளவு இறக்கி வைத்தது. அதை பங்குகளாக பாரத ஸ்டேட் வங்கி மற்றும் ஐசிஐசிஐ வங்கிகள் வாங்கிக் கொண்டன. அப்போது சந்தையில் நிலவிய பங்கு விலையில் 60 விழுக்காடு கொடுத்து அந்தப் பங்குகள் இந்த வங்கிகளுக்குக் கிடைத்தன. இந்த வகையில் சுமார் 1,400 கோடி ரூபாய் மதிப்பிலான கடனை மக்கள் பணத்தில் தீர்த்துக் கொண்டார் விஜய் மல்லையா. இதன்பிறகும் இருக்கும் நிறுவனத்தின் இழப்புதான் சுமார் எட்டாயிரம் கோடி ரூபாய். 1,400 கோடி ரூபாய் கொடுத்து கிங் ஃபிஷரைக் காப்பாற்ற பாரத ஸ்டேட் வங்கி மற்றும் ஐசிஐசிஐ ஆகியவை எடுத்த முயற்சிகள் அந்த வங்கிகளுக்கு பாதகமாகவே முடிந்துள்ளன. கடுமையான நெருக்கடி காரணமாக கிங் ஃபிஷர் நிறுவனத்தின் பங்கின் விலை வெறும் ரூ.19 ரூபாய் அளவுக்கு சரிந்துவிட்டது. ஏகப்பட்ட கோடிகளை இரண்டு வங்கிகளும் இழந்து நிற்கின்றன. 

தனியார் துறை வெற்றியின் அடையாளமாகக் காட்டப்பட்ட கிங் ஃபிஷர் நிறுவனம், முதலாளித்துவ கொள்கைகள் எத்தகைய தாக்கங்களை ஏற்படுத்தும் என்பதற்கான அடையாளமாக மாறியுள்ளது.

விஜய் மல்லையாவின் சொத்து 
2011 ஆம் ஆண்டுக்கணக்குப்படி அவருடைய சொத்து மதிப்பு 22 ஆயிரத்து 850 கோடி ரூபாய்.
610 கோடி ரூபாய் செலவில் ஃபார்முலா-1 அணி.
ஐ.பி.எல். அணியான ராயல் சேலஞ்சர்சை 464 கோடி ரூபாய்க்கு வாங்கினார்.
16 ஆடம்பரக் கார்கள்
200 பந்தயக் குதிரைகள்
ஏராளமான பழங்கால வாட்கள் மற்றும் நினைவுச்சின்னங்களை ஏலத்தில் எடுத்துள்ளார். 

கிங் ஃபிஷர் கடன் வாங்கியுள்ள வங்கிகள் 

பொதுத்துறை 

பாரத ஸ்டேட் வங்கி(எஸ்.பி.ஐ) - 1,410 கோடி ரூபாய்
ஐ.டி.பி.ஐ - 719 கோடி ரூபாய்
பஞ்சாப் நேஷனல் வங்கி - 702 கோடி ரூபாய்
பேங்க் ஆப் இந்தியா - 552 கோடி ரூபாய்
பேங்க் ஆப் பரோடா - 532 கோடி ரூபாய்
யுனைடெட் வங்கி - 395 கோடி ரூபாய்
சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா - 360 கோடி ரூபாய்
கார்ப்பரேசன் வங்கி - 305 கோடி ரூபாய்
யூகோ வங்கி - 287 கோடி ரூபாய்
ஸ்டேட் வங்கி ஆப் மைசூர் - 139 கோடி ரூபாய்
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி - 122 கோடி ரூபாய்
ஓரியண்டல் பேங்க் ஆப் காமர்ஸ் - 56 கோடி ரூபாய்
பஞ்சாப் அண்டு சிந்த் வங்கி - 51 கோடி ரூபாய்     
மொத்தம் = 5632 கோடிகள்
தனியார் துறை 

ஐசிஐசிஐ வங்கி - 430 கோடி ரூபாய்
பெடரல் வங்கி - 100 கோடி ரூபாய்
ஆக்சிஸ் வங்கி - 46 கோடி ரூபாய்
இண்டஸ் இந்த் வங்கி - 6 கோடி ரூபாய்

- நன்றி : தீக்கதிர் 
     

Friday, November 11, 2011

தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மகுட முத்தாய் அமைந்த முத்தாலம்மன் ஆலய வழிபாடு

தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் பயணத்தில் ஒரு மைல் கல் உத்தப்புர முத்தாலம்மன் கோவில் ஆலய வழிபாடு . 

ஏழை யென்றும் அடிமை யென்றும்
      எவனும் இல்லை ஜாதியில்,
இழிவு கொண்ட மனித ரென்பது
      இந்தி யாவில் இல்லையே
வாழி கல்வி செல்வம் எய்தி
      மனம கிழ்ந்து கூடியே
மனிதர் யாரும் ஒருதி கர்ச
      மான மாக வாழ்வமே!

என்ற மகா கவியின் வைர வரிகளுக்கு உருவேற்றி, உயிருட்டி மெய்ப்பிக்க பாடுபட்ட அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் ... ]

செய்திகள் தீண்டாமை ஒழிப்பு முன்னணி பக்கத்தில் பார்க்க