Saturday, November 19, 2011

மாணவர்களுக்கான மாதிரி தேர்வு மற்றும் பயிற்சி முகாம் நிறைவு நிகழ்ச்சி



இந்தியாவிற்கான மக்கள் இயக்கம் சிவகங்கை கிளை சார்பாக வங்கி பணியிடங்களுக்கான இலவச மாதிரி தேர்வு மற்றும் பயிற்சி முகாம் நிறைவு நிகழ்ச்சி சிவகங்கை மன்னர் மேல்நிலை பள்ளியில் நடைபெற்றது . நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக சிவகங்கை நகர் மன்ற தலைவர் திரு M.அர்ச்சுனன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரை நிகழ்த்தினர். நிகழ்ச்சியினை தலைமை ஏற்று இந்தியாவிற்கான மக்கள் இயக்க சிவகங்கை கிளை  தலைவர் திரு.S.கண்ணப்பன் அவர்கள் நடத்தினர் மன்னர் கல்வி நிறுவன செயலாளர் திரு V .S . குமரகுரு அவர்கள் முன்னிலை வகித்தார். இன்சூரன்ஸ் ஊழியர் சங்க மதுரை கோட்ட செயலாளர் திரு N.சுரேஷ்குமார் அவர்கள் வாழ்த்துரை வழங்கினர்  நன்றி உரையினை DR .அம்பேத்கர் கல்வி வேலை வாய்ப்பு மைய சிவகங்கை ஒருங்கிணைப்பாளர்  திரு B.பாரதிதாசன் அவர்கள் வழங்கினர்.
வாழ்த்துரையில் திரு அர்ச்சுனன் அவர்கள் சிவகங்கை மாவட்டத்தில் 1989 க்கு பிறகு I .A .S  பணிக்கு யாரும் தேர்வாகாத நிலை உள்ளது எனவே இது போன்ற பயிற்சி மையங்களை தொடர்ச்சியாக நடத்திட அணைத்து வசதிகளுடன் கூடிய பயிற்சி மையம் ஒன்றினை சிவகங்கை நகரில் ஏற்படுத்திட சிவகங்கை நகராட்சி அணைத்து முயற்சிகளையும் எடுக்கும் என உறுதி கூறினார். நிகழ்ச்சியில் 50க்கும் மேற்பட்ட  மாணவர்கள் கலந்து கொண்டு தேர்வு எழுதினர். 


No comments:

Post a Comment

Please do not write junk comments; hate-messages; spoil words. Thank you.