சன 30 , 2012
மதுரை கோட்டம் முழுமையும் நான்காம் பிரிவு தற்காலிக ஊழியர்களாக பணியாற்றி தற்பொழுது புதிய பணிநியமன ஆணை பெறவுள்ள அணைத்து தோழர்களும் அகில இந்திய காப்பீட்டு கழக ஊழியர் சங்கத்தில் தங்களை இணைத்து கொண்ட நிகழ்ச்சி மதுரை சுனில் மைத்ரா இல்லத்தில் நடைபெற்றது . நிகழ்ச்சிக்கு மதுரை கோட்டச் சங்க தலைவர் தோழர் மீனாட்சி சுந்தரம் தலைமை ஏற்க துணைத் தலைவர் தோழர் மகாலிங்கம் வரவேற்புரை வழங்கினர் தென்மண்டல துணைத் தலைவர் தோழர் R தர்மலிங்கம் அவர்கள் சிறப்புரை வழங்கி உறுப்பினர் படிவங்களை பெற்றுக்கொண்டார் பென்சனர் சங்க மதுரை கோட்டசெயலாளர் தோழர் ராஜகுணசேகர் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார் பொது இன்சூரன்ஸ் மதுரை கோட்டசெயலாளர் தோழர் புஷ்பராஜ் வாழ்த்துரை வழங்கினார் . கூட்டத்தில் பங்கேற்ற தோழர்கள் சங்கத்தின் மாண்புகளை ஒவ்வொருவரும் புதிய புதிய கோணங்களில் பதிவு செய்தனர்.உணர்வுகளும்,உணர்ச்சிகளும்ஒருங்கே அமைந்த அக் கூட்டத்தினை மதுரை கோட்டச் சங்க செயலாளர் தோழர் சுரேஷ்குமார் புதிய வரவு தோழர்களின் எதிர் கால கடமைகளையும், கண்ணியத்தையும் , கட்டுப்பாட்டினையும் வலியுறுத்தி நன்றி உரையாற்றினார் . இத்தகைய மகத்தான நிகழ்வில் பங்கேற்ற, பங்காற்றிய அணைத்து தோழர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
"இன்று புதிதாய் பிறந்தோம்
புதியதோர் உலகம் செய்வோம் "
என்ற பாரதிதாசனின் வரிகளை மனதில் ஏந்தி புறப்படுவோம் ... புதுஉலகம் படைத்திட
No comments:
Post a Comment
Please do not write junk comments; hate-messages; spoil words. Thank you.