உழைப்பாளி வர்க்கத்தின் உன்னத தலைவருக்கு உளமார்ந்த
அஞ்சலி
Add caption |
அகில இந்திய தொழிற்சங்கமையத்தின் முன்னாள் பொதுச்செயலாளரும் , தலைவரும் தற்போதைய உதவித் தலைவருமான தோழர்.டாக்டர்.எம்.கே.பாந்தே,அவர்கள் நேற்றைய தினம் ஆகஸ்ட் ௨௦ அன்று அதிகாலை ௦௦.20 மணியளவில் மறைந்தார்.
தோழர்.டாக்டர் எம்.கே. பாந்தே 1925 ஜூலை 11 - ல் பிறந்தார். 1946ல் தொழிற்சங்க நடவடிக்கைகளில் தன்னை இணைத்து கொண்டதன் மூலம் தனது தொழிற்சங்கவாழ்க்கையை துவக்கினார். நாட்டின் ஒன்றுபட்ட ஓர் உயர்மட்ட தொழிற்சங்க மையத்தை நிறுவதில் முக்கியமான தனது பங்களிப்பை நல்கினார், பின்னர் சி.ஐ.டி.யூ வின் நிறுவனத் தலைவர்களில் ஒருவராக திகழ்ந்து அதன் பொதுச்செயலாளர், தலைவர் உள்ளிட்ட பல பொறுப்புகளில் திறம்பட செயல்பட்டார் தனது வாழ் நாள் முழுவதும் தொழிலாளி வர்க்கத்தின் நலனுக்காக தன்னை அர்ப்பணித்த தோழர் எம்.கே.பாந்தே அவர்களின் மறைவு ஈடு செய்ய முடியாதது. அத்தகைய மகத்தான தலைவர் எந்த நோக்கத்தோடு தன் வாழ்நாளின் பெரும் பகுதியை அர்ப்பணித்தாரோ அந்த நோக்கம் நிறைவேற உறுதி ஏற்பதே அவருக்கு நாம் செலுத்தும் அஞ்சலி.
No comments:
Post a Comment
Please do not write junk comments; hate-messages; spoil words. Thank you.