Monday, December 23, 2013

DR.அம்பேத்கர் நினைவு தின கருத்தரங்கம்

       DR.அம்பேத்கர் நினைவு தின கருத்தரங்கம் 



அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 57வது நினைவு தின கருத்தரங்கம் இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் தேவகோட்டை கிளையின் சார்பில் தேவகோட்டையில் 23.12.2013 அன்று நடைபெற்றது. தேவகோட்டை கிளை செயலாளர் தோழர் ஜி. சந்திரசேகர் தலைமை ஏற்க கிளை செயலாளர் தோழர் வி . செல்வராஜ் வரவேற்புரை வழங்கினார். DR.அம்பேத்கர் பற்றிய நினைவுகளை கருத்துரையாக மதுரை கோட்ட பொதுசெயலாளர் தோழர் நா.சுரேஷ்குமார் கருத்துரையாற்றினார். நிகழ்வினை வாழ்த்தி எல்.ஐ.சி முதல் நிலை அதிகாரிகள் சங்க பொறுப்பாளர் தோழர் வைரவன் ,லியாபி சங்க பொறுப்பாளர் தோழர் எஸ்.மரியலூயிஸ்,லிகாய் சங்க பொறுப்பாளர் தோழர் தங்கராஜன், மூட்டா சங்கம் சார்பில் தோழர் முருகன் ,த.மு.எ.க.ச தேவகோட்டை கிளை சார்பில் தோழர் சி.போஸ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.கருத்தரங்கில் சிவகங்கை மாவட்ட இன்சூரன்ஸ் ஊழியர் சங்க ஊழியர்கள் ,காரைக்குடி ,திருப்பத்தூர் ,சிவகங்கை கிளைசங்க பொறுப்பாளர்கள், முகவர்கள்,வளர்ச்சி அதிகாரிகள் பங்கேற்றனர் .மகளிர் துணைக்குழு இணை செயலாளர் தோழர் எஸ் .தெய்வானை நன்றியுரை வழங்கினார் .

Tuesday, December 17, 2013

23 வது அகில இந்திய மாநாடு

இன்சூரன்ஸ் ஊழியர் சங்க  

23 வது அகில இந்திய மாநாடு

சனவரி, 20-24, 2014
 நாக்பூர்  
                                                 
 
வெல்லட்டும் ! சிறக்கட்டும் !!

Saturday, December 7, 2013

தாராளமயக் கொள்கையால் அனைத்து தரப்பு மக்களும் பாதிப்பு: டி.கே.ரங்கராஜன்  எம்.பி.பேச்சுதென் மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பு மாநில சிறப்பு மாநாட்டில் பேசுகிறார் மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.ரங்கராஜன். உடன், காப்பீட்டுக் கழக நிர்வாகிகள் (இடமிருந்து) ஜி.ஆனந்த், புண்ணியமூர்த்தி, க.சுவாமிநாதன், சட்டப்பேரவை உறுப்பினர் ஆர்.அண்ணாதுரை.

மத்திய அரசு பின்பற்றி வரும் தாராளமயக் கொள்கையால் அனைத்து தரப்பு மக்களும் பாதிப்படைந்துள்ளனர் என மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் கூறினார்.
தென் மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பு, தென் மண்டல பொது இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் சார்பில் மதுரையில் தமிழ்நாடு தொழில், வர்த்தக சபை அரங்கில் சனிக்கிழமை நடைபெற்ற மாநில சிறப்பு மாநாட்டில் அவர் பேசியது:
இன்சூரன்ஸ் துறையில் அந்நிய நேரடி முதலீட்டை 26 சதத்திலிருந்து 49 சதமாக உயர்த்துவது, பொது இன்சூரன்ஸ் நிறுவனங்களின் பங்குகளை விற்பது என்பதில் காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு தீவிரமாக இருக்கிறது. இதற்கு பாஜக முழுமையாக ஆதரவு தருகிறது. நடப்பு நாடாளுமன்றக் கூட்டத் தொடர் முடிய இன்னும் குறுகிய நாள்களே உள்ளன. நான்கு மாநில பேரவைத் தேர்தல் முடிவுகள், கருத்துக் கணிப்பின்படி இருந்தால், இன்சூரன்ஸ் மசோதாவை பாஜக நிறைவேற்ற விடாது. ஆகவே, இன்சூரன்ஸ் மசோதா நிறைவேறாது என்பதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன.
இந்த மசோதாவை கடுமையாக எதிர்த்து வருகிறேன். அதற்கு காரணம் நாடு முழுவதும் இன்சூரன்ஸ் ஊழியர்கள் நடத்திய போராட்டம்தான். அன்றைய சூழலில் இடதுசாரிகளுக்கு மக்களவையில் 64 உறுப்பினர்களும், மாநிலங்களவையில் 17 உறுப்பினர்களும் இருந்தனர்.
இதனால் இன்சூரன்ஸ் மசோதாவை காங்கிரஸ் அரசால் நிறைவேற்ற முடியவில்லை. இன்றைய சூழலில் அத்தகைய பலம் இல்லை, இதனால் மசோதா கொண்டு வரப்பட்டால் அதை எதிர்த்து வாக்களிக்க மட்டுமே முடியும்.
மத்திய அரசு பின்பற்றிவரும் தாராளமயக் கொள்கைகளால் சமூகத்தின் அனைத்துத் தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். சிறு, நடுத்தர, உற்பத்தியாளர்களுக்கு மின்வெட்டு, கடனுக்கான வட்டி அதிகரிப்பு ஆகியன மட்டுமே பாதிப்பு அல்ல. புதிய பொருளாதாரக் கொள்கைகளும் அதிலிருக்கும் நிபந்தனைகளும் சிறு உற்பத்தியாளர்களைக் கடுமையாகப் பாதிக்கிறது. இன்சூரன்ஸ் மசோதா நிறைவேற்றப்பட்டால் அது தொழிலாளர்கள், சிறு உற்பத்தியாளர்கள், விவசாயிகள் என அனைத்துத் தரப்பினரையும் பாதிக்கும். ஆகவேதான், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இதைக் கடுமையாக எதிர்க்கிறது.
இன்சூரன்ஸ் துறையைப் பாதுகாப்பது என்பது, மக்களின் சேமிப்பைப் பாதுகாப்பது மட்டுமல்ல. கடந்த 60 ஆண்டு காலமாக இத் துறையில் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள் பெற்றுவந்த இட ஒதுக்கீட்டைப் பாதுகாப்பதும் கூட. அடிப்படை வசதிகளுக்காகப் போராடும் பொதுமக்கள், அவர்களது சேமிப்புக்கு ஆதாரமாக இருக்கும் இன்சூரன்ஸ் துறையில் அந்நிய நேரடி முதலீடு அதிகரிப்பதை எதிர்த்துப் போராடவில்லை. காரணம், இதன் பாதிப்பு என்ன என்பது அவர்களுக்குச் சென்று சேரவில்லை. அதைச் செய்வதற்கான நடவடிக்கைகளை இன்சூரன்ஸ் ஊழியர்கள் மேற்கொள்ள வேண்டும் என்றார். மதுரை தெற்கு சட்டப்பேரவை உறுப்பினர் ஆர்.அண்ணாதுரை, தென் மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பு, பொதுச் செயலர் க.சுவாமிநாதன், துணைத் தலைவர் ஆர்.புண்ணியமூர்த்தி, தென் மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் சங்க பொதுச் செயலர் ஜி.ஆனந்த் உள்ளிட்டோர் பேசினர்.
நான்கு பொதுத் துறை இன்சூரன்ஸ் நிறுவனங்களை இணைப்பது, இன்சூரன்ஸில் அந்நிய நேரடி முதலீட்டை உயர்த்தக் கூடாது, பொது இன்சூரன்ஸ் பங்குகளை விற்கக் கூடாது என்பதை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
                                                                                 

 சிறப்பு மாநாட்டிற்கு தென்மண்டல துணைத்தலைவர் தோழர் R.புண்ணிய மூர்த்தி தலைமை ஏற்க மதுரை கோட்ட சங்க பொதுச்செயலாளர் தோழர் N .சுரேஷ்குமார் வரவேற்புரை நிகழ்த்த பொது இன்சூரன்ஸ் ஊழியர் சங்க தென் மண்டல பொறுப்பாளர் தோழர் ஆனந்த் துவக்கி வைத்து உரை நிகழ்த்தினார் மாநாட்டினை வாழ்த்தி CPM மாநிலங்களவை உறுப்பினர் தோழர் T.K.ரங்கராஜன் ,மதுரை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் தோழர் இரா.அண்ணாதுரை மற்றும் எல்.ஐ.சி தேசிய களப்பணியாளர் கூட்டமைப்பின் மதுரை கோட்ட தலைவர்  தோழர் ஆபேத் மனோகர் தேவாரம் ,லிகாய் தென்மண்டல பொதுசெயலாளர் தோழர் M.செல்வராஜ்       எல்.ஐ.சி ஒய்வு பெற்றோர்  சங்கத்தின் பொதுச்செயலாளர் தோழர் C.சந்திர சேகரன் (பாரதி)  முதல்நிலை அதிகாரிகள் சங்க தலைவர் N.மனோகரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர் . மாநாட்டினை நிறைவு செய்து தென் மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் தோழர் க.சுவாமிநாதன் கருத்துரை வழங்கினார் .பொது இன்சூரன்ஸ் மதுரை மண்டல செயலாளர் தோழர் புஷ்பராஜ் நன்றியுரை வழங்கினார் 
இன்சூரன்ஸ் துறையில் அந்நிய நேரடி முதலீட்டை உயர்த்தும் மத்திய அரசின் முடிவை கைவிட கோரி உத்தமபாளையம் கிளை தோழர்கள் கம்பம் சட்டமன்ற உறுப்பினர் திருமிகு .N .ராமகிருஷ்ணன் அவர்களை சந்தித்து மகஜர் வழங்கி ஆதரவு கோரினர் . நிகழ்வில் உத்தமபாளைய கிளை செயலாளர் தோழர் .சரவணன் ,தலைவர் .மணி பொறுப்பாளர் வீரகாமு உள்ளிட்ட கிளை தோழர்களுடன் மதுரை கோட்ட சங்க உதவி பொருளாளர் தோழர் தனிகைராஜ் உத்தமபாளைய கிளை மேலாளர் ஆகியோர் கலந்து கொண்டனர் .

Tuesday, November 26, 2013




இன்சூரன்ஸ் துறையில் அந்நிய நேரடி மூலதன உயர்வை கைவிடகோரி திருநகர் கிளை இன்சூரன்ஸ் ஊழியர்கள் இன்று (26.11.13) திண்டுக்கல்  பாராளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு என்.எஸ் .வி . சித்தன் அவர்களை சந்தித்து மகஜர் ஒன்றை வழங்கினர் .நிகழ்வில் திருநகர் கிளை தலைவர் தோழர் எஸ் .கிருஷ்ணன் ,கிளை செயலாளர் தோழர் எம் . மகாலட்சுமி ,மதுரை கோட்ட சங்க உதவி பொருளாளர் தோழர் எஸ் .தனிகைராஜ் ,ஒய்வூதியர் சங்க செயலாளர் தோழர் சி . சந்திரசேகரன் ,மற்றும் முன்னணி தோழர்கள் ஆர்.வெயில்முத்து, பி. மருதுபாண்டி ,வி .ஆறுமுகம் ,ஆர்.பிச்சை ,பி. கந்தன், ஆகியோர் கலந்து கொண்டனர்.

Monday, November 25, 2013






இன்சூரன்ஸ் அந்நிய நேரடி மசோதாவை கைவிடக்கோரி இன்று (25.11.2013) திருநகர் கிளை தோழர்கள் விருதுநகர் பாராளுமன்ற உறுப்பினர் திரு.P.மாணிக்கம் தாகூர் அவர்களை சந்தித்து மகஜர் ஒன்றை வழங்கினர்.
நிகழ்வில் திருநகர் கிளை தலைவர் தோழர் S.கிருஷ்ணன் செயலாளர் தோழர் M.மகாலட்சுமி , மகளிர் துணைக்குழு பொறுப்பாளர் தோழர் M.உஷா,மற்றும் K.விஜயலட்சுமி,S.சரோஜா,S.கீதா,S.செல்வி,S.சூடாமணி,மற்றும் கிளைசங்க உறுப்பினர்கள் தோழர் R.வெயில்முத்து,P.மருதுபாண்டி,V.ஆறுமுகம்,
S.சிசில்  மனுவெல் சுதாகர் ,பாலச்சந்தர்,G.ரெங்கராஜன், ஆகியோர் கலந்து கொண்டனர் மகஜரை வழங்கி மசோதாவின் அபாயம் குறித்து கோட்ட சங்க முன்னாள் தலைவரும் ஒய்வூதியர் சங்க செயலாளருமான தோழர் C. சந்திர சேகர பாரதி விளக்கினார் ,கோட்ட சங்க உதவிப் பொருளாளர் தோழர் S.தனிகைராஜ் உடனிருந்தார் . 

Sunday, November 24, 2013



                இன்சூரன்ஸ் ஊழியர்களின் மகஜர் வழங்கும் இயக்கம்
இன்சூரன்ஸ் துறையில் அந்நிய நேரடி மூலதன உயர்வை கண்டித்து நாடு முழுவதும் உள்ள இன்சூரன்ஸ் ஊழியர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களை சந்தித்து இன்சூரன்ஸ் துறையில் அன்னிய நேரடி

மூலதன உயர்வை கைவிட கோரி மகஜர் வழங்கி வருகின்றனர் . அதன் ஒரு பகுதியாக மதுரை கோட்டத்தில் இன்று (24.11.2013) காரைக்குடியில் மத்திய நிதி அமைச்சர் மாண்புமிகு ப .சிதம்பரம் அவர்களை சந்தித்து இன்சூரன்ஸ் மசோதாவை கைவிடக்கோரும்  மகஜர் ஒன்றை மதுரை கோட்டச் சங்க தலைவர் தோழர்  G.மீனாட்சிசுந்தரம் அவர்கள் வழங்கி மசோதாவை கைவிட வலியுறுத்தினார் .கோட்ட சங்க பொதுச் செயலாளர் தோழர் N.சுரேஷ்குமார் உடன் கோட்டச் சங்க பொறுப்பாளர்களும் நிகழ்வினை ஏற்பாடு செய்த காரைக்குடி மற்றும் தேவகோட்டை ,திருப்பத்தூர் கிளை சங்க பொறுப்பாளர்கள் முன்னணி தோழர்கள் மற்றும் காரைக்குடி கிளை வளர்ச்சி அதிகாரிகள் மற்றும் முகவர் சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டனர்

Thursday, November 21, 2013








இன்சூரன்ஸ் ஊழியர்களின் மகஜர் வழங்கும் இயக்கம்

இன்சூரன்ஸ் துறையில் அந்நிய நேரடி மூலதன உயர்வை கண்டித்து நாடு முழுவதும் உள்ள இன்சூரன்ஸ் ஊழியர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களை சந்தித்து இன்சூரன்ஸ் துறையில் அன்னிய நேரடி மூலதன உயர்வை கைவிட கோரி மகஜர் வழங்கி வருகின்றனர் . அதன் ஒரு பகுதியாக மதுரை கோட்டத்தில் திருநகர் கிளை சார்பாக இன்று தவத்திரு பொன்னம்பல அடிகளார் அவர்களை சந்தித்து மகஜரை வழங்கினர் . நிகழ்வில் திருநகர் கிளை இன்சூரன்ஸ் ஊழியர் சங்க உறுப்பினர்கள் மற்றும் ஒய்வு பெற்ற இன்சூரன்ஸ் ஊழியர் சங்க செயலாளர் தோழர் சந்திரசேகர பாரதி ,திருநகர் கிளை செயலாளர் தோழர் மகாலட்சுமி மற்றும் கோட்டசங்க உதவி பொருளாளர் தோழர் தனிகைராஜ் கிளை சங்க பொறுப்பாளர்கள் தோழர் வெயில் முத்து மற்றும் மருதுபாண்டி ,ஆறுமுகம் ,அழகர்சாமி முகவர் பொன்மநோகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்

Monday, April 22, 2013

இன்சூரன்ஸ் ஊழியர்களின் மாபெரும் மனிதச்சங்கிலி இயக்கம் 

                      இன்சூரன்ஸ் துறையில் அந்நிய நேரடி மூலதன உயர்வை கொண்டு வரும் மத்திய அரசின் இன்சூரன்ஸ் மசோதாவை கண்டித்து சிவகங்கையில் இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் சார்பில் மாபெரும் மனிதச் சங்கிலி இயக்கம் நடைபெற்றது .மனிதச் சங்கிலி இயக்கத்தை இந்தியாவிற்கான மக்கள் இயக்க சிவகங்கை கிளை தலைவர் தேசிய நல்லாசிரியர் திரு.M கண்ணப்பன் அவர்கள் துவக்கி வைத்து உரையாற்றினார் . நிகழ்வில் சிவகங்கை நகர் மன்ற தலைவர் திரு 
M .அர்ச்சுனன்,CITU  நிர்வாகிகள்  தோழர் M கந்தசாமி ,R வீரையா ,அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் தோழர் மெய்யப்பன் , ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி தோழர்கள்,வங்கி மற்றும் தொலைதொடர்பு ஊழியர் சங்க நிர்வாகிகள்,தமிழ் நாடு அரசு ஒய்வுஊதியர்கள் ,  LIC ஊழியர்கள் ,முகவர்கள் ,வளர்ச்சி அதிகாரிகள் ,முதல் நிலை அதிகாரிகள் என அணைத்து தொழிற்சங்கங்களின் சார்பில் 250க்கும் மேற்பட்டவர்கள் திரளாக பங்கேற்றனர் நிகழ்ச்சிக்கு சிவகங்கை கிளை செயலாளர் தோழர் M கர்ணன் தலைமைவகித்தார் கோரிக்கைகளை விளக்கி மதுரை கோட்ட துணை பொருளாளர் தோழர் S தனிகைராஜ் விளக்க உரையாற்றினார் சிவகங்கை கிளை பொறுப்பாளர் தோழர் B .பாரதி தாசன் அவர்கள் நன்றியுரை வழங்கினர் .
01.JPG02.jpg

Sunday, February 17, 2013

நாடு தயாராகிறது .. நாமும் தயாராகுவோம்..


பிப்ரவரி 20 - 21 - பொது வேலைநிறுத்தம் : நாடு தயாராகிறது..! 

 தோழர். ஏ.கே. பத்மநாபன் அகில இந்திய பொதுச்செயலாளர் சி. ஐ. டி. யு., 

http://sphotos-c.ak.fbcdn.net/hphotos-ak-prn1/149991_4617939087286_1245810193_n.jpg
 நாட்டில் முதன்முறையாக 2013 பிப்ரவரி 20 மற்றும் 21 தேதிகளில் தொடர்ந்து 48 மணி நேரம் நடைபெறவுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க பொது வேலைநிறுத்தத்திற்கு நாட்டிலுள்ள தொழிலாளி வர்க்கம் தயாராகிக் கொண்டிருக்கிறது. நாட்டில் உள்ள 11 மத்திய தொழிற்சங்கங்களும், பல்வேறு தேசிய சம் மேளனங்களும் விடுத்திருந்த இந்த அறை கூவலுக்கு மாநிலங்கள் அளவில் செயல்படும் அமைப்புகளும், சுயேச்சையாக இயங்கும் பல்வேறு தொழிற்சங்கங்களும், இதர அமைப் புகளும் ஆதரவு தெரிவித்துள்ளன. ஆட்சியாளர்களின் தொழிலாளர் விரோத, மக்கள் விரோத கொள்கைகளுக்கு எதிராகவும், அதற்கு மாற்றாக மாற்றுக்கொள்கை ஒன்றை முன்வைத்தும் நாட்டில் உள்ள அனைத்துத் தொழிற்சங்கங்களும் இணைந்து நடத்திடும் மாபெரும் அளவிலானதாகவும், இதற்கு முன்னெப்போதும் நடந்திராத வகையில் மிகப் பிரம்மாண்டமானதாகவும் அமைந்திடும் என் பதையே நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் வந்து கொண்டிருக்கும் தகவல்களிலிருந்து அறிய முடிகிறது.1991ஆம் ஆண்டு பி.வி. நரசிம்மராவ் தலை மையிலான மத்திய காங்கிரஸ் அரசாங்கத் தால் நாட்டில் நவீன தாராளமயக் கொள்கை களை அமல்படுத்தத் தொடங்கியபோதே, அதற்கு எதிரான போராட்டத்தை தொழிற் சங் கங்களும் தொடங்கிவிட்டன.
உண்மையில், 1980களின் முற்பகுதியி லேயே அன்றைய இந்திரா காந்தி தலைமையி லான மத்திய அரசாங்கம் சர்வதேச நிதியத் தின் கட்டளைக்கிணங்க கொள்கைகளை மக் கள் மீது திணிக்க முற்பட்ட சமயத்திலேயே தொழிற்சங்கங்கள் மாற்றுக் கொள்கைகளை எழுப்பத் தொடங்கிவிட்டன. தொழிலாளர்கள், விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், வேலையில்லா இளை ஞர்கள் ஆகியோரின் கோரிக்கைகள் தொழிற் சங்கங்களின் தேசிய பிரச்சாரக் குழுவால் முன்வைக்கப்பட்டு, அவையும் வேலை நிறுத் தத்தில் இறங்கியதைத் தொடர்ந்து, 1982 ஜன வரி 19 அன்று நாடு தழுவிய அளவில் நடை பெற்ற பொது வேலைநிறுத்தமும் கடை அடைப்புப் போராட்டமும் மாபெரும் வெற்றி பெற்றன.இந்தியத் தொழிற்சங்கங்களின் ஒருங்கி ணைப்புக் குழு மற்றும் வெகுஜன அமைப்பு களின் தேசிய மேடை ஆகியவை போன்ற கூட்டு மேடைகளால் 1991இலிருந்து போராட் டங்களுக்கான அறைகூவல்கள் விடுக்கப்பட் டதைத் தொடர்ந்து, ஒன்றுபட்ட தொழிற்சங்க இயக்கத்தின் இரண்டாவது கட்டம் துவங்கி யது. அதிலிருந்து 2008 வரை தொழிலாளர் களுக்கும் உழைக்கும் மக்களுக்கும் நீதி வழங்கக்கோரி, நாடு தழுவிய அளவில் 12 ஒரு நாள் பொது வேலை நிறுத்தங்கள் நடை பெற்றுள்ளன. 2009 ஆம் ஆண்டு செப்டம்பரில் தேசிய அளவிலான சிறப்பு மாநாடு நடைபெற்றதைத் தொடர்ந்து நவீன தாராளமயக் கொள்கை களுக்கு எதிரான ஒன்றுபட்ட போராட்டங் களில் புதிய எழுச்சி உருவானதைப் பார்த்தோம்.2010 செப்டம்பர் 7 அன்று நடைபெற்ற பொது வேலை நிறுத்தமும், வேலைநிறுத் தத்தையொட்டி அதற்கு முன்னதாக மிகப் பெரிய அளவில் நடைபெற்ற பிரச்சார இயக் கங்களிலும், சிறைநிரப்பும் போராட்டங்களி லும் மேலும் மேலும் தொழிலாளர்கள் அணி அணியாகத் திரண்டதைப் பார்த்தோம்.
முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு 2011 பிப்ரவரி 23 அன்று தில்லியில் நாடாளு மன்றம் நோக்கி நடைபெற்ற பேரணி மற்றும் இதர பிரச்சார இயக்கங்களும் தொழிற்சங்க இயக்கங்களின் கூட்டுமேடையை மேலும் வலுவுள்ளதாக மாற்றின. இதனை அடுத்து நாட்டில் இயங்கும் 11 மத்தியத் தொழிற் சங்கங்களும் அநேகமாக அனைத்து தேசிய சம்மேளனங்களும் ஒரே குடையின்கீழ் கொண்டுவரப்பட்டன. இதனை அடுத்து 2012 பிப்ரவரி 28 அன்று நடைபெற்ற மற்றுமொரு பொது வேலைநிறுத்தத்தில் அனைத்துத் துறையில் இயங்கும் தொழிலாளர்களும் பங்கு கொண்ட பத்து கோடி தொழிலாளர்களுக்கும் மேற்பட்டோர் பங்கேற்ற மாபெரும் வேலை நிறுத்தம் நடைபெற்றது. இதற்கு முன் எந்தப் போராட்டத்திலும் பங்கேற்காத பல பிரிவினர் இவ்வேலைநிறுத்தத்தில் கலந்து கொண் டனர். தற்போது மீண்டும், அவ்வேலை நிறுத்தம் நடைபெற்று ஓராண்டு காலம் முடிவதற்குள் ளேயே, நாட்டின் தொழிலாளர்கள் அனை வரும் 48 மணி நேர பொது வேலை நிறுத்தத் திற்கு நன்கு தயாராகிவிட்டார்கள்.அத்தியாவசியப் பொருட்களின் விலை களைக் கட்டுப்படுத்துவது, உணவுப் பாது காப்பை உத்தரவாதப்படுத்தும் அனைவருக்கு மான பொது விநியோக முறையை அமல் படுத்துவது, பத்தாயிரம் ரூபாய்க்கும் குறையாது குறைந்தபட்ச ஊதியம் வழங்குவது, சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும். மிகக்கொடூரமான முறையில் சுரண்டலுக்கு வழிவகுக்கும் ஒப்பந்தமுறைக்கு முடிவு கண்டிடுவது, எல்லாவற்றிற்கும் மேலாக சங்கம் அமைக்கும் உரிமையையும் தொழி லாளர்களின் கூட்டுபேர சக்தியையும் உத்தர வாதப்படுத்துவது ஆகிய கோரிக்கைகள் அடங்கிய கோரிக்கை சாசனத்தை முன் வைத்தே நாட்டில் உள்ள அனைத்துத் தொழி லாளர்களும் இவ்வேலைநிறுத்தத்திற்கு அறைகூவல் விடுத்திருக்கிறார்கள்.2012 செப்டம்பரில் நடைபெற்ற சிறப்பு மாநாட்டில் 48 மணி நேர வேலைநிறுத்தத்திற் காக அழைப்பு விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து அதற்கான தயாரிப்பு வேலைகளும் சுறுசுறுப் பாகத் தொடங்கிவிட்டன.அனைத்து மாநிலங்களிலும் அனைத்து சங்கங்களும் கூட்டாக இணைந்து நின்று மாநில அளவிலான சிறப்பு மாநாடுகளை நடத் தின. பல மாநிலங்களில் மாவட்ட அளவிலும், வட்ட மற்றும் வட்டார அளவிலும் கூட சிறப்பு மாநாடுகள் நடத்தப்பட்டுள்ளன. மாநில அள வில் நடைபெற்ற சிறப்பு மாநாடுகளில் மத் தியத் தொழிற்சங்கங்களின் மூத்த தலைவர் கள் பங்கேற்று, முன்னணி ஊழியர்கள் கடைக் கோடியில் பணியாற்றும் தொழிலாளர்கள் உட்பட அனைத்துத் தொழிலாளர்களிடமும் செய்தியைக் கொண்டுசெல்ல வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.
துறைவாரியான ஒற்றுமை
இந்த முறை, துறைவாரியாக நடைபெற்ற சிறப்பு மாநாடுகளும், பிரச்சார இயக்கங் களும் புதியதொரு எல்லையை எட்டியுள்ளன. மத்திய பொதுத்துறை சங்கங்களின் தேசிய சிறப்புமாநாடு சென்னையில் டிசம்பர் 15 அன்று நடைபெற்றது. இதில் பிஎம்எஸ், ஐஎன் டியுசி, சிஐடியு, ஏஐடியுசி, எச்எம்எஸ், தொமுச மற்றும் சுயேச்சையான சங்கங்கள் ஆகியவற் றுடன் பெங்களூரிலும் ஹைதராபாத்திலும் இருந்து கூட்டு நடவடிக்கைக் குழுவைச் சேர்ந்தவர்கள் உட்பட கலந்து கொண்டனர்.உருக்கு, நிலக்கரி, பெட்ரோலியம், என்டி பிசி, பவர் கிரிட் மற்றும் பல்வேறு மாநில மின் வாரியங்கள், பொதுத்துறை மற்றும் தனியார் துறை போக்குவரத்து நிறுவனங்கள் ஆகியவற் றிலும் கூட்டு சிறப்புமாநாடுகள் நடைபெற் றன. அனைத்து சிறப்பு மாநாடுகளிலும், கூட்டுக் கூட்டங்களிலும் தொழிலாளர்கள் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு அணி திரண்டு நின்றதையும், ஆர்வத்தோடு பங் கேற்றதையும் பார்க்க முடிந்தது. வடகிழக்கு மாநிலங்களிலும் கூட புதிதாகப் பல அமைப்பு கள் உருவாகியுள்ளதையும் தெரிந்து கொள்ள முடிந்தது. மத்தியப் பொதுத்துறை நிறுவனங் களில் உள்ள சங்கங்கள் அனைத்தும் கூட் டாகவே பிரச்சாரங்களில் ஈடுபட்டன. வேலை நிறுத்த நோட்டீசையும் கூட்டாகவே அளித் துள்ளன.வங்கித்துறையில் உள்ள அனைத்து சங் கங்களும் ஒன்று சேர்ந்து ஆட்சியாளர்கள் கொண்டுவந்துள்ள வங்கிச் சட்டத் திருத்தச் சட்டமுன்வடிவுக்கு எதிராக டிசம்பர் 20 அன்று நாடு தழுவிய அளவில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதைப் பார்த்தோம். அவை 48 மணி நேர வேலைநிறுத்தத்தின் போதும் ஒற்றுமையுடன் கலந்துகொள்வோம் என்று வங்கித்துறையில் பணியாற்றும் அதி காரிகள் மற்றும் ஊழியர்களை உள்ளடக்கிய வங்கி சங்கங்களின் ஒன்றுபட்ட அமைப்பின் (ருகுக்ஷரு-ருnவைநன குடிசரஅ டிக க்ஷயமே ருniடிளே) சார்பில் அறைகூவல் விடுத்திருக்கிறார்கள். டெலிகாம் துறையில் உள்ள 13 சங்கங் களும் ஒன்றிணைந்து, வேலைநிறுத்தத்தில் பங்கேற்பதாக அறிவித்திருக்கின்றன. இன்சூரன்ஸ் துறையும் வழக்கம்போலவே வேலைநிறுத்தத்தில் முழுமையாகப் பங் கேற்கவிருக்கிறது.நாட்டில் உள்ள அனைத்துப் பெரிய துறை முகங்களிலும் இயங்குகின்ற தேசிய சம்மேள னங்கள் அனைத்தும் அறைகூவல் விடுத் திருப்பதன் காரணமாக அந்த இரு நாட்களும் நாட்டில் உள்ள துறைமுகங்கள் அனைத் திலும் வேலைஎதுவும் நடைபெறாது ஸ்தம் பித்து நிற்கும்.
அகில இந்திய மாநில அரசு ஊழியர் சம்மேளனம், மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனம் ஆகியவையும் மற்றும் ஆசி ரியர் அமைப்புகளும் இவ்வேலைநிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்பதாக அறிவித்திருக் கின்றன. பல மாநிலங்களில் பிரச்சார வேலை களில் முன்னணியில் நிற்கின்றன.பாதுகாப்புத்துறையில் உற்பத்தி மையங் களிலும் அலுவலகங்களிலும் பணியாற்றும் சிவில் ஊழியர்கள் மற்றும் அலுவலர்களும் இவ்விருநாள் வேலைநிறுத்தத்தில் பங்கேற்கிறார்கள். அவர்களை அணிதிரட்டியுள்ள   மூன்று சம்மேளனங்களும் வேலைநிறுத்தத்தில் பங்கேற்பதாகத் தீர்மானித்துள்ளன. அங்கன்வாடி, ஆஷா, மதிய உணவு ஊழியர்கள் போன்று பல லட்சக்கணக்கான திட்ட ஊழியர்களும்  இவ்வேலை நிறுத்தத்தில் பங்கேற்கிறார்கள். அங்கன்வாடியில் செயல்பட்டுவரும் சிஐடியு, ஏஐடியுசி, ஐஎன்டியுசி, எச்எம்எஸ், பிஎம்எஸ் ஆகியவற்றின் கீழ் செயல்படும் அனைத்து சங்கங்களும் வேலைநிறுத்தத்தில் கலந்துகொள்ளப்போகி றோம் என்று மத்திய அரசுக்கு கூட்டாக வேலைநிறுத்த நோட்டீஸ் அளித்துள்ளன. நாட்டில் உள்ள பெரிய அளவிலான அனைத்துத் தொழில் மையங்களும், தனியார் துறை தொழிற்சாலைகளும் வேலை நிறுத் தத்தில் முழுமையாகப் பங்கேற்கின்றன.
      குர்கான், மானேசர், காசியாபாத், தமிழ்நாட்டில் ஸ்ரீபெரும்புதூர், பெங்களூரு மற்றும் கர்நாடக மாநிலத்தைச் சுற்றியுள்ள பகுதிகள் மற்றும் கிரேட்டர் ஹைதராபாத் பகுதி ஆகியவற்றிலும் முழுமையான அளவில் தயாரிப்புப் பணிகள் நடைபெற்றுள்ளன. கட்டுமானம், பீடி, கைத்தறி-விசைத்தறி, சுமைப்பணி போன்ற முறைசாராத் தொழிலா ளர்களும் வேலைநிறுத்தப் பிரச்சாரத்தின் முன்னணியில் நின்றார்கள்.சிறப்பு மாநாடுகள் மட்டுமல்லாது, பல மாநிலங்களிலும் நடைபெற்ற பொதுக் கூட்டங்களிலும் தொழிலாளர்கள் பெரும் திரளாகக் கலந்து கொண்டார்கள். சங்கங்களின் உயர்மட்ட தலைவர்கள் அவற்றில் உரையாற்றி னார்கள். மகாராஷ்டிரா, ஒடிசா, ஆந்திரப் பிரதேசம், அசாம், கேரளம் மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் மாநில அளவில் இயங்கிடும் பல்வேறு தொழிற்சங்கங்களும் நாட்டின் பல பகுதிகளில் செயல்படும் வர்த்தகர் அமைப்புகளும் இப்போராட்டத்தில் தங்களையும் இணைத்துக் கொள்வதாகவும், பொது வேலை நிறுத்தத்தை மாபெரும் வெற்றியாக்கித் தருவதாகவும் உறுதி அளித்துள்ளார்கள்.
         பிரச்சாரத்தின் வீச்சும், அதற்கு மக்கள் மத்தியில் கிடைத்துள்ள அபரிமிதமான ஆதரவும் 2012 டிசம்பர் 18 - 19 தேதிகளில் நாடு முழுவதும் நடைபெற்ற சாலை மறியல் மற்றும் சிறை நிரப்பும் போராட்டங்களிலும் டிசம்பர் 20 நாடாளுமன்றம் நோக்கிப் பேரணி இயக்கத் தில் அண்டை மாநிலங்களிலிருந்து பெரும் திரளான மக்கள் கலந்து கொண்டதிலிருந்தும் நன்கு பிரதிபலித்தது. ஏப்ரலில் நடைபெறவுள்ள அகில இந்திய மாநாட்டின் தயாரிப்புப் பணிகளின் ஒரு பகுதியாக நாடு முழுவதும் மாவட்ட, மாநில மாநாடுகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இவற்றிலும் 48 மணி நேர வேலை நிறுத்தத்தை பிரம்மாண்டமான முறையில் வெற்றிகரமாக்கிடக்கூடிய விதத்தில் தனியே விவாதங்கள் நடைபெற்றதையும் பார்க்க முடிந்தது. வேலைநிறுத்தத்தையொட்டிய கடைசி நிமிட பிரச்சாரம் தற்போது அனைத்துத் துறைகளிலும் உள்ள தொழிலாளர்களின் அனைத்துப் பிரிவினர் மத்தியிலும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.வேலை நிறுத்தம் நடைபெறும் இரு நாட் களிலும் தங்கள் கோரிக்கைகளை முன்வைத் தும், தொழிற்சங்கங்கள் முன்வைத்துள்ள கோரிக்கைகளுக்குத் தார்மீக ஆதரவு தெரிவித்தும் அகில இந்திய விவசாயிகள் சங்கமும், அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கமும் களத்தில் இறங்கிடவும் தீர்மானித்துள்ளது. வேலைநிறுத்தம் நடைபெறும் இரு நாட்களிலும் பெரும் திரளான தொழிலாளர்களின்-விவசாயிகளின், விவசாயத் தொழிலாளர்களின் பேரணிகள், ஆர்ப்பாட்டங்கள், தர்ணாக்கள், சாலை மறியல்கள், ரயில் மறியல்கள் நடைபெறவுள்ளன. ஒட்டுமொத்தத்தில், 48 மணி நேர பொது வேலைநிறுத்தம், இந்தியத் தொழிற்சங்க வரலாற்றில் தேசிய அளவில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு, தேசிய அளவில் மட்டும் அல்ல, சர்வதேச அளவிலும் சொல்லத்தக்க அளவில் மிகப் பிரம்மாண்டமான வேலை நிறுத்த நடவடிக்கையாக அமைந்திடும். தொழிலாளர் வர்க்கம் ஒரு நாள் வேலை நிறுத்தம் 14 முறை நடத்தியும், துறைவாரியாக வும் எண்ணற்ற வேலைநிறுத்தங்களும் போராட்டங்களும் நடந்த பின்னரும் கூட, மத்திய அரசாங்கமானது போராடும் சங்கங் களை அழைத்து, அவர்கள் கோரிக்கைகள் குறித்துப் பேச வேண்டியது அவசியம் என்று கருதவில்லை, மாறாக ‘‘அழிந்தாலும் பரவா யில்லை, நவீன தாராளமய பொருளாதார சீர்திருத்தங்களை நிறைவேற்றியே தீருவது’’ என்ற வெறியுடன் மிகவும் வேகமாக சீர் திருத்தக் கொள்கைகளை அமல்படுத்த விரும்புகிறது. இத்தகைய சூழ்நிலைகளில் தான் இப்போது நடைபெறவிருக்கும் பொது வேலைநிறுத்தமானது ஆட்சியாளர்கள் கடைப்பிடிக்கும் மக்கள் விரோதக் கொள் கைகளிலிருந்து நாட்டையும் நாட்டு மக்களை யும் காப்பாற்றும் ஒரு தேசபக்த நடவடிக் கையாக மாற்றுக் கொள்கைகளை அமல் படுத்த வேண்டியதன் அவசியத்தை வலி யுறுத்தும் நடவடிக்கையாக அமைந்திடும். மேலும் மக்கள் விரோதக் கொள்கைகளை நிறுத்திட ஆளும் வர்க்கங்களுக்கு ஓர் எச் சரிக்கையாகவும் அமைந்திடும்.முதலாளித்துவம் மிகவும் ஆழமான நெருக்கடிக்குள் சிக்கிக் கொண்டிருக்கிறது. நம் நாட்டின் பொருளாதார நிலைமையும்கூட அனைவரையும் கடுமையாகப் பாதித்திருக் கிறது. இந்நிலையில் மாற்றுக் கொள்கை களுக்கான போராட்டம் மிகவும் முக்கியத் துவம் பெறுகிறது. உழைக்கும் வர்க்கத்தின் ஒன்றுபட்ட போராட்டம் பாதிப்புக்கு உள்ளாகி யிருக்கிற அனைத்துப் பிரிவினரையும் நிச்சய மாக வீறுகொண்டு எழச் செய்து, வரவிருக்கும் காலங்களில் போராட்டங்களில் அணி வகுத்திடும்.

Saturday, February 16, 2013

தமிழ்நாடு அறிவியல் இயக்கமும் மற்றும் இந்தியாவிற்கான மக்கள் இயக்கமும் (LIC) இணைந்து மாதவிடாய் ஆவணப்படம் பழனி பொன்னர் சங்கர் திருமண மண்டபத்தில் 16,02,2013 மாலை 5 00 மணிக்கு நடைபெற்றது . நிகழ்வில் கலந்து கொண்டு இன்சூரன்ஸ் ஊழியர் சங்க மதுரை கோட்ட பொதுச்செயலாளர் தோழர் N.சுரேஷ்குமார் வாழ்த்துரை வழங்கினார்